எம். ஆர் .பி – கோவிட் செவிலியர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி .

எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்று  பணி நியமனத்துக்காக காத்திருந்த செவிலியர்கள் கடந்த ஆட்சி காலத்தில்,  கொரோனா தீவிரமாக மக்களை பாதித்த காலக் கட்டத்தில்,
தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, 
எம் .ஆர் .பி கோவிட் செவிலியர்கள் சங்கமும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும் ,சட்டப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தன.

இந்நிலையில் , 864 எம் .ஆர். பி கோவிட்  செவிலியர்களுக்கு ,தமிழ்நாடு அரசு மீண்டும் பணி வழங்கியுள்ளது.

அவர்களின் வாழ்வில் , நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. இது வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரியது.

தமிழ்நாடு அரசின் இந் நடவடிக்கையைப் பாராட்டி நன்றி பாராட்டும் விழா , நாளை (14.03.2024) வியாழக்கிழமை மாலை 4.00  மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலுள்ள, அப்துல் ரஸாக் தெருவில், ராஜ் திரையரங்கம் அருகில் உள்ள,
எஸ். பி .எஸ் திருமண மண்டபத்தில் , நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்குகிறார்.

இணைச் செயலாளர்கள் ஜ.பெர்ஜினோ,சே.நஸ் ரின் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆ. அமலா டைகோ வரவேற்புரையாற்றுகிறார்.

இவ்விழாவில்,  மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் திரு மா. சுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றுகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர்
இரா.முத்தரசன் , துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர் இரவீந்திரநாத் , ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எம் .இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர் .சாந்தி எம்.ஆர். பி கோவிட் செவிலியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ. உதயகுமார் ,மாநில  பொதுச் செயலாளர் செ.ராஜேஷ்  தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.காளிதாசன்,எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்
த. மதியரசு,பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்  எஸ்.ஆறுமுகம்,
எம்.ஆர். பி – கோவிட் செவிலியர் சங்கத்தின்
இணைச் செயலாளர்கள் இரா.அன்புச் செல்வி,ஏ.பிரபு, வ.சுருளி பிரபு,
உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கூடுதல் செயலாளர் மஞ்சு நன்றி நவில்கிறார்.

இந் நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொள்கின்றனர்.

மீண்டும் பணிநியமனம் பெறாமல் உள்ள ,அனைத்து எம்.ஆர்.பி – கோவிட் செவிலியர்களுக்கும் ,உடனடியாக தமிழ்நாடு அரசு,மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.

  பணியில் இருக்கும் செவிலியர்கள்,செவிலிய மாணாக்கர்கள்,பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க முடியாத நிலை தொடர்கிறது.

எனவே, அவர்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை தொடர்ந்து இழந்து வருகின்றனர்.  எனவே, அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் ,அவர்களுக்கு  தபால் வாக்கு வழங்கிட, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ,தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்
ஏ.ஆர் .சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவண்,

டாக்டர் ஜி .ஆர் இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
9940664343

செ.ராஜேஷ்,
பொதுச் செயலாளர்,
எம்.ஆர். பி – கோவிட் செவிலியர் சங்கம்.
9944970377
7299410671

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here