மனித பரிமாண வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. உலகளவில் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM துறைகளில் பெண்கள் எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைகழக விவேகானந்தா அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகரம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் அண்ணா பல்கலைகழகம், முல்லை கல்வியியல் நிறுவனம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் மாநாட்டில் தொடக்க உரையாற்றினார். நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா சிறப்புரை வழங்கினார்.

மாநாட்டில் சூர்யா பேசியதாவது,
அகரத்திற்கு இன்று ரொம்ப முக்கியமான நாள். முதல் முறையா Academic Focus பண்ணி STEM தொடர்பா ஒரு Conference நடத்துறோம். கடந்த பதினைந்து வருட அகரம் விதைத் திட்ட பணிகளில் இதுவரைக்கும் 52௦௦-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிச்சிருக்காங்க.. படிச்சிட்டு இருக்காங்க… அதில் 70% பேர் தங்கைகள்… பெண்கள் தான் படிக்கிறாங்க… அது முக்கியமான பங்களிப்புன்னு நினைக்கிறேன். தொடர்ச்சியா பெண்கள் கல்விக்கு உறுதியா நிற்க முடிஞ்சது பெரிய achievement-ஆ பார்க்குறேன்.

இவ்வளவு பெண் பிள்ளைகளுக்கு Support பண்றோம்.. பெண்கள் படிச்சிர்றாங்க… அப்படின்னு யோசிச்சாலும் அதுக்குள்ள வேற என்ன பண்ணனும்? வேற என்ன பண்ணனும்னு யோசிக்கும் போது தான் Realise பண்ண விஷயம்.. ஒரு Science சம்மந்தப்பட்ட துறைகளிலையோ, படிப்புகளிலோ.. அதற்கு அப்புறமா அது சம்மந்தப்பட்ட வேலைகளையோ.. Science-னா, Science மட்டுமில்லை Science, Engineering, Technology, Mathematics; அந்த STEM துறைகள்ல படிக்கிறதும்; அது சார்ந்த பணிகள்-ல Continue பண்ணறதும் ரொம்ப குறைவா இருக்கு. ஏன் இப்படி இருக்கு அப்படின்னு பார்க்கும் பொழுது, இது அகரம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. உலகம் முழுக்கவே இந்த Challenge இருக்கு 30% பெண்கள் தான் STEM சம்பந்தப்பட்ட துறைகள்ல உலகம் முழுக்க பங்கேற்காங்குறாங்க.. ஏறக்குறைய 12 மில்லியன் பெண்கள் உலகம் முழுக்க STEM சம்மந்தப்பட்ட துறைகள்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறாங்க. ஆனா.. எப்படி பார்த்தாலும் அது ஆண்களை விட மிக மிக மிக குறைவு தான்.

ஏன் பெண்களின் பங்கு குறைவா இருக்குங்கறதுக்கு உலகளவுல நிறைய ரிப்போர்ட் இருக்கு. பெரிய அளவுல பாகுபாடு காட்டப்படுது காரணமா சொல்லப்படுது. வீட்ல ஆரம்பிச்சு குழந்தைகள் பிறந்து வளரும் சூழல்.. ஆண் பெண் விளையாட்டு பொருள் வாங்கி கொடுக்குறதுல இருந்தே பாகுபாடு இருந்துகிட்டே இருக்கு… STEM துறைகள்ல பெண்கள் வர்றதுக்கு இந்த பாகுபாடான அணுகுமுறை தடையா இருக்கு. இந்த பாகுபாடு குறித்து பேசணும், அத புரிஞ்சுக்கணும்.. அத உடச்சி தகர்த்து வெளிய வரணும்னு தோணிச்சி..

STEM-ங்கறது Science, Engineering, Technology, Mathematics மட்டுமல்ல. அது ஒரு Creativity, Problem Solving, Innovation சம்மந்தப்பட்டது. Resilience, Problem Solving Capability, Creative-ஆ யோசிக்கிறது, innovative இருக்கிறது பெண்களுக்கு இயல்பா இருக்கு. ஆனா, அத தாண்டி அவங்களுக்கான Space ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு. அதுக்கு ரொம்ப முக்கியமான காரணம்-னு Research என்ன சொல்லுதுன்னா.. பெண்களுக்கான Roll Model; அவங்கள மாதிரியே அவங்க பார்க்கவேண்டிய Roll Model ரொம்ப குறைவா இருக்கிறாங்க. Roll Models இல்லாததாலேயே அதுக்குள்ள போகுறதுல தயக்கமும், மனத்தடையும் இருக்குன்னு சொல்றாங்க.

இங்க நம்ம முன்னாடி இருக்கிற உதாரணங்கள் எல்லாம் Actually அவ்வளோ பெண்கள் STEM-ல சாதிச்சிருக்காங்க. ஆனா நமக்கு வெளியில தெரியறது கிடையாது. உதாரணத்திற்கு நிறைய முன்னோடி பெண்கள் வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இன்னக்கி நாம புழங்குற பல விஷயங்கள் கண்டுபிடிச்சவங்க பெண்கள் தான்.

அடுத்த இரண்டு நாள் நாம பார்க்கப்போற, உரையாடப் போற Resource Persons எல்லாமே STEM துறைகள்ல சிறந்த பங்களிப்புகளை வழங்கிய வழங்க இருக்கின்றவர்கள். பல ஆய்வுகள செஞ்சிட்டு இருக்கிற ஆளுமைகள். இவங்களோட நீங்க பேசணும், உரையாடனும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கணும். உலகம் பரந்து இருக்கிறது அதில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் தெரிஞ்சிக்கணும்.. புரிஞ்சுக்கணும் தான் இந்த Empower’-ஒட முக்கியமான purpose. ​STEM குறித்த விழிப்புணர்வை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி கூடங்களில் ​பரவலாக உருவாக்கவேண்டும்.

சமீபத்தில் Interesting ஆய்வு குறித்து பேசிட்டு இருந்தோம். அந்த ஆய்வு Harvard பல்கலைகழகத்தில் Engineering படிக்கிற ஆண்கள், பெண்கள் மத்தியில் நடத்தப்பட்டது அந்த ஆய்வுல என்ன சொல்றாங்கன்னா பெண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க; ஆண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க. ஆனால் அதிகபட்சமா இங்க ஆண்கள் தான் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள இருக்காங்க. பெண்கள் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள வந்தாங்கன்னா, என்ன செய்வாங்க? என்ற அந்த ஆய்வோட முடிவு என்ன சொல்லுதுன்னா… பெண்கள் வந்தாங்கன்னா இவங்க ரொம்ப ரொம்ப சமூகப் பொறுப்போட Socially Conscious இருப்பாங்க. பெண்கள் பிரச்சனைகளை ரொம்ப realistic-ஆ அணுகுவாங்க. பிரச்சனைக்கு இவங்க யோசிக்க கூடிய தீர்வு.. அதை விட ரொம்ப யதார்த்தமாகவும், செயல்படுத்த கூடியதாகவும், மக்களுக்குரியதாகவும் இருக்கும். அது வெறும் பணம் சம்பாதிக்கதுக்குரியதாக இல்லாம மக்களுக்கானதாக இருக்கும்-னு அந்த ஆய்வு சொல்லுது. அதனால் தங்கைகள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக Research, கண்டுபிடிப்புகளுக்குள்ளும், STEM சம்மந்தப்பட்ட துறைகளில் உங்களை தொடர்ந்து இயக்குங்கள். இதுல Career, வாய்ப்பும், தேவையும் நிறைய இருக்கு.. முயற்சி செய்திங்கனா நீங்கள் கண்டிப்பா சாதிக்க முடியும். STEM துறைகளில் பெண்களின் பங்கேற்ப்பு குறித்த உரையாடலை, செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதற்கே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு நடக்கறதுக்கு காரணமாக இருகின்ற முனைவர் விஜய அசோகன், இதனை முதல் நாளில் இருந்து கையில் எடுத்து செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் அகரம் Volunteers ஒவ்வொருவருக்கும், Academicians, இந்த மாநாட்டை நடத்த இடம் வழங்கி முன் நிற்கும் அண்ணா பல்கலைகழகத்திற்கும் அதன் Registrar, துணைவேந்தர், பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளும்… வாழ்த்துகளும்… இந்த STEM மாநாடு நடத்துவதற்கான Sponsors : Naturals, Tekion, Kauvery Hospital, antcorp, GRT, Anil Engineering ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இது ஒரு தொடக்கம் மட்டும் தான்… இந்த இரண்டு நாள் மாநாட்டில் பகிரப்படும் கருத்துக்கள், பரிந்துரைகள் தொகுக்கபட்டு அரசாங்கத்திற்கு பரிந்துரையாக வழங்கயிருக்கிறோம்.

தமிழக அளவில் ‘Women in STEM’-க்கான முதன் முதலாக நடைபெறுகிற சர்வதேச மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடல், Paper Presentation, Thesis Submission, Orientation Sessions, Departmental Workshops, STEM துறைகள்ல உள்நாடு, வெளிநாடு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறுவதற்கான Career Guidance அனைத்தும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. STEM துறைகளில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் நாளை (19-03-2024 | செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

  • அகரம் பவுண்டேஷன், சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here