விஸ்வரூபம் கொடைக்கானல் நள்ளிரவு 12 மணி இருக்கும் நானும் கமல்ஹாசன் அவர்களும் லொகேஷன் பார்ப்பதற்கு அவருடைய மலைப்பகுதியில் தைலமர வாசனையுடன் நடந்து சென்று கொண்டிருந்தோம் அப்போது அவர் என்னிடம் இங்கு Bison எந்த நேரம் வேணாலும் நம்மை தாக்கலாம் என்றார் அடுத்த அடியை என்னால் எடுத்து வைக்க முடியவில்லை அங்கேயே நின்று விட்டேன் திரும்பி பார்த்த அவர் அட வாங்க என்றார் சரி அதான் அவர் கூட இருக்காரு அவர் பாத்துக்க மாட்டாரா என்று அவர் பின்னே சென்றேன் ஆனாலும் பயப்படாமல் இல்லை
அப்பொழுது ஒருவர் எங்கள் மீது தூரத்தில் இருந்து TORCHLIGHT அடித்தார் நள்ளிரவு அவர் தெரியல ஒளி மட்டும் தெரிந்தது
அருகே வந்தார் வாங்க என்று வரவேற்றர்
அவர் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்தோம் எல்லா இடங்கங்களையும் சுற்றி காட்டினார் பின்பு தேனீர் வேண்டுமா என்று அவர் அங்கு தங்கி இருக்கும் குடிலுக்கு அழைத்து சென்றார் எனக்கு ஒரே மகிழ்ச்சி ஒரு வழியாக வெளிச்சம் நோக்கி செல்வதால்
சென்றாதானித்தோம்
இப்போ தான் அவர் முகத்தை அருகில் பார்த்தேன் வியந்து பார்த்தேன் கண்கள் விரித்து பார்த்தேன் அதை சார் பார்த்து விட்டார் நான் கண்களால் கேட்டேன் அவரும் கண்களால் பதில் சொன்னார்
விடை பெற்று கொண்டு ஜீப் ல செல்லும் போது திருப்பவும் கேட்டேன் ஆம் மருதநாயகம் அவர் சாயலில் இருந்து எடுத்து கொண்ட LOOK என்று
அவர் யாரு என்றேன்
என்னுடைய மாமா என்றார்
எதற்கு கலங்காத என் ஆசான் கலங்குறார் என்றால் காதல் இல்லாமலா
காதல் கலைஞர் அல்லவா என் தலைவன்
போய்ட்டு வாங்க மாமா
லால்குடி என் இளையராஜா