முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இயக்கக் கோளாறுகளை அறுவைச்சிகிச்சை மூலம் நிர்வகிப்பதற்கான களத்தை அமைத்துத் தரும்.

ஐம்பத்தைந்து வயதான திரு. எம்.ஏ., பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, தனது நாட்டில் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவரது அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்து, அவரது நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால், அவரது நரம்பியல் நிபுணர் அவரை மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரிடம் பரிந்துரைத்தார். பரிந்துரையைத் தொடர்ந்து, நோயாளி ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், நரம்பியல் குழு வழிகாட்டியுமான மருத்துவர் ஸ்ரீதரைக் கலந்தாலோசித்தார். திரு. எம்.ஏ. தனது அறிகுறிகளில், கணிசமான முன்னேற்றத்தை அடைய உதவும் மிகவும் பயனுள்ள அறுவைச்சிகிச்சையான ஆழ் மூளை தூண்டுதலைப் பரிந்துரைத்தார் மருத்துவர் ஸ்ரீதர்.

ஆழ் மூளை தூண்டுதல் (DBS) என்பது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், மூளையின் குறைந்தபட்ச இடத்தை ஆக்கிரமித்துச் செய்யப்படும் அறுவைச்சிகிச்சை ஆகும். இது, மூளையைப் பாதிக்கும் பார்கின்சன் நோய் போன்றவைக்குச் சிறப்பான சிகிச்சையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனநல பாதிப்புகளுக்கும், பிற இயக்கக் கோளாறுகளுக்கும், நம்பகமான சிகிச்சை முறையாக இருக்கிறதென்று அறிவியல் ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. இந்த மருத்துவ நடைமுறையில், மூளையின் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பகுதிக்கு லேசான மின்னோட்டத்தை வழங்குவதற்கும், மூளையின் செல்களை மிகவும் திறமையாகச் செயற்படத் தூண்டுவதற்கும், நோயின் அறிகுறிகளைச் சமாளிக்க உதவுவதற்கும், மூளையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் மின்முனைகள் துல்லியமாக வைக்கப்படுகின்றன.

ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்கவியல் நிபுணர்கள், மின் உடலியங்கியலர் (Electrophysiologist) மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் போன்ற பல்வேறு நிபுணர்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுப்பணியுடன், டிபிஎஸ் (DBS) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நன்றாகக் குணமடைந்ததோடு, சில நாட்களிலேயே அறிகுறிகளிலிருந்து கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“மூளையின் சில பகுதிகளிலுள்ள மூளையின் செல்களைச் செயலிழக்கச் செய்யும் நரம்பியல் நிலைமைகளால் ஏற்படும் பலவீனமான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிபிஎஸ் (DBS) ஒரு சிறப்பான சிகிச்சை முறையாகும். அறுவைச்சிகிச்சை சிறப்பாக முடிந்தது. நோயாளி நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 11, உலக பார்கின்சன் தினமாகும். நாங்கள், பார்கின்சன் போன்ற நரம்பியல் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு டிபிஎஸ் (DBS) போன்ற தீர்வுகள் உள்ளன என்பதையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்” என்று மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர் கூறினார்.

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here