Cannes, France – In a momentous achievement for Indian cinema and gaming, ManMar Games’ innovative project ‘IRUVAM’ has been officially selected for the prestigious Cannes International Film Festival’s “Let’s Spook Cannes” event. As the world’s foremost celebration of cinematic art, Cannes is renowned for showcasing groundbreaking films and now, with its inclusion of interactive live-action games, the festival is embracing the future of entertainment. Among numerous global submissions, ‘IRUVAM’ stands out as one of only four projects chosen, marking a significant achievement as the sole representative from India.
The evolution of technology in cinema has been both rapid and fascinating. From the era of silent films to the present, where cutting-edge technologies like 3D and motion capture redefine storytelling, Indian Cinema has continuously adapted and thrived. ‘IRUVAM’ represents the next step in this evolution, merging film and gaming into an interactive experience that blurs the lines between viewer and creator.
‘IRUVAM’ is not just a game; it’s an innovative full-motion video (FMV) game that promises a cinematic journey tailored by the audience. Set to be released in Tamil and English, this pioneering project offers a narrative where the viewer’s choices directly impact the storyline, leading to multiple possible endings. Directed by the acclaimed Manoj Annadurai, known for his award-winning film ‘Get Happy’, and featuring Varsha Bollamma in a pivotal role, ‘IRUVAM’ is crafted by a talented team including Pozhilan, Manu Mithra, and Karthick Jeevanandam, with Arjun Venkatesh leading cinematography, Elaya Raja S editing, and Timothy Madhukar providing the musical score.
This remarkable selection at Cannes is not only a testament to the innovative spirit of ManMar Games but also a beacon of pride for India’s creative industries. ‘IRUVAM’ embodies the fusion of film and gaming, inviting players and viewers alike to engage in a narrative that is as dynamic as it is captivating.
As ‘IRUVAM’ prepares for its grand unveiling at Cannes from May 17-20, 2024, and its subsequent release on mobile platforms, the anticipation among cinema and game enthusiasts is palpable. This selection highlights the project’s unique position at the intersection of gaming and cinema, promising not only to entertain but also to inspire future collaborations between these two dynamic industries.
ManMar Games invites the global community to witness this groundbreaking endeavor that promises to redefine the boundaries of audience engagement and narrative storytelling.
உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கான்ஸ் (Cannes) விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்ஷன் கேம்/திரைப்படம் (Interactive Live Action Movie/Game) !
மே 17 முதல் 20 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது ‘கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா’.
140 நாடுகளிலிருந்து 14,0000-க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னபிற திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் மாபெரும் நிகழ்வில் ‘Let’s Spook Cannes’ என்கிற தலைப்பின் கீழ் ஒரு தமிழ் படைப்பு தேர்வாகி இருக்கிறது.
இந்நிகழ்வின் நோக்கம் கேமிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பரிந்துரைக்கப்படும் பல்வேறு வீடியோ கேம்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து காட்சிப்படுத்துவது.
இந்திய சினிமா மற்றும் கேமிங்கிற்கான ஒரு முக்கியமான சாதனையாக, மன்மார் கேம்ஸின் புதுமையான ‘இருவம்’ திரைப்படம், மதிப்புமிக்க கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்’ நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு அல்லது சினிமா என்ற குறுகிய அளவில் நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் சினிமாவிற்குள் பங்கெடுக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ள “இருவம்” இந்தியாவின் முதல் FMV (Full Motion Videos) கேம் .
அதாவது ‘இருவம்’ படைப்பில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்களின் முடிவுகளை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். அம்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் திரையில் பிரதிபலிக்கும்.
இக்கதையின் முடிவைத் தீர்மானிக்கப் போவதும் அவர்கள் தான். ஆக இதில் பார்வையாளர்களும் படைப்பாளிகள். இந்த புதுவித அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படைப்பு உருவாகியிருக்கிறது.
முதலில் மெளனப்படங்கள் பின்
கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படம், 3D, மோஷன் கேப்சரிங் என மாறி வந்து
இன்று இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கதை சொல்லலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த கான்ஸ் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் இருவம் தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.
கெட் ஹேப்பி’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கிய மனோஜ் அண்ணாதுரையின் இயக்கத்தில் ‘இருவம்’
சினிமா மற்றும் வீடியோ கேம் ஆகிய இருபெரும் துறையை இணைத்து, எளிய மக்களும் பயன்படுத்தும் செல்போன் குறுந்திரையில் வெளியாக இருக்கிறது.
இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொழிலன், கார்த்திக் ஜீவானந்தம் மற்றும் மனு மித்ரா ஆகியோரைக் கொண்ட மன்மார் குழு இந்த புதுமையான படத்தை உயிர்ப்பிக்க அயராது உழைத்திருக்கின்றனர். அர்ஜுன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, இளையராஜா. எஸ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். திமோதி மதுகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
’இருவம்’ திரைப்படம் படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு அற்புதமான திட்டமாகும். இது ஒரு புதுவிதமான கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விஷயம் இந்தியத் திரைப்படத் துறையில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.