Vignesh G, voiceover artist for Baahubali: Crown of Blood in Tamil on the prep he did to voice Baahubali: “I spent a lot of time studying Prabhas sir’s portrayal”

There are many events and stories in the world of Baahubali and Mahishmati that are unheard, unseen and unwitnessed. Disney + Hotstar and Graphic India recently launched animated series of one of India’s fan favorite film franchise, Hotstar Specials’ ‘Baahubali: Crown of Blood’, a story where Baahubali and Bhallaladeva will join hands to protect the great kingdom of Mahishmati and the throne against its greatest threat, the mysterious warlord, Raktadeva

A Graphic India and Arka Mediaworks production, Baahubali: Crown of Blood is produced by visionary S.S. Rajamouli, Sharad Devarajan &Shobu Yarlagadda, directed and produced by Jeevan J. Kang & Navin John.

Dubbing for iconic characters comes with its own set of challenges. One such character is of Baahubali essayed exceptionally well by one of the finest actors in the industry; Prabhas. Here is what Vignesh G, who has lent his voice to the Tamil dubbed version of Baahubali: Crown of Blood has to say about his preparations to voice the lead character

Talking about the same, tamil dubbing artist, Vignesh G, said, “Prabhas sir has done an exceptional job with his role as Baahubali and has created a huge fan base. Adapting to it and creating the same grandeur in the animated version was indeed a tough job. It was important for me to capture the essence of what made Baahubali so beloved while also bringing my own spin to the character. I spent a lot of time studying Prabhas sir’s portrayal, trying to understand every little detail about how he brought Baahubali to life on screen and tried to make it my own by infusing the character with my own style and personality. It was definitely a challenge, but also an incredibly rewarding experience”

~ Baahubali: Crown of Blood is streaming now only on Disney+ Hotstar ~

தமிழில் பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் குரல் கலைஞரான விக்னேஷ் G, பாகுபலிக்குக் குரல் கொடுக்க அவர் செய்த முன்தயாரிப்பு குறித்து: “பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்ய நான் நிறைய நேரம் செலவிட்டேன்”

பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, கண்டிராத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கிராஃபிக் இந்தியாவும் சமீபத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட ஃப்ராஞ்ச்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் ‘பாகுபலி: கிரீடம் ஆஃப் ப்ளட்’ என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தின. இது பாகுபலியும் பல்வாழ்தேவனுவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யம் மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, மர்மமான போர்வீரன், ரக்ததேவனிடமிருந்து பாதுகாக்கும் கதையாகும்.

கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட், தொலைநோக்குப் பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசுவது அதற்கே உரிய சவால்களைக் கொண்டதாகும். அத்தகைய ஒரு பாத்திரமான பாகுபலி சிறந்த நடிகர்களில் ஒருவரால் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்; பிரபாஸ். பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் தமிழ் டப்பிங் பதிப்பிற்குக் குரல் கொடுத்த விக்னேஷ் G, முக்கியக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பதற்கான தனது முன்தயாரிப்புகள் குறித்து கூறியது இதோ.

இது குறித்து பேசிய தமிழ் டப்பிங் கலைஞர் விக்னேஷ் G, “பாகுபலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபாஸ் சார் மிகச் சிறப்பான பணியைச் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அனிமேஷன் பதிப்பில் அதைத் தழுவி அதே பிரமாண்டத்தை உருவாக்குவது உண்மையில் கடினமான வேலை. பாகுபலியை மிகவும் பிரியத்திற்கு உரியதாக மாற்றியது எதுவோ அதன் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் அதே நேரத்தில் கதாபாத்திரத்திற்கு எனது சொந்த அம்சத்தையும் கொண்டுவருவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்வதில் நான் நிறைய நேரம் செலவிட்டேன். அவர் பாகுபலியை திரையில் எவ்வாறு உயிர்ப்பிக்கிறார் என்பதைப் பற்றிய ஒவ்வொரு சிறு விவரத்தையும் புரிந்துகொள்ள முயன்றேன். மேலும் பாத்திரத்தில் எனது சொந்த பாணியையும் ஆளுமையையும் புகுத்தி அதை எனக்குரியதாக்கவும் முயற்சி செய்தேன். அது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு மதிப்பிற்குரிய அனுபவமாகவும் இருந்தது.” என்று குறிப்பிட்டார்.

~ பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகிறது ~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here