காசாகிராண்ட் கட்டும் காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’ அடுக்குமாடி குடியிருப்பின் பேஸ்-2 திட்டத்திற்கான விளம்பர தூதராக நடிகர் விஜய்சேதுபதி நியமனம்
சோழிங்கநல்லூரில் இருந்து 5 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது; 1693 குடியிருப்புகளுடன் ஒரு சதுர அடின் விலை ரூ.3999
சென்னை, அக்.1, 2021-: தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான காசாகிராண்ட் மக்களின் மனம் கவர்ந்த நடிகரான விஜய் சேதுபதியை அந்நிறுவனம் சோழிங்கநல்லூரில் கட்டிவரும் ‘காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’ (CASAGRAND FirstCity) – இன் பேஸ்-2 திட்டத்திற்கான விளம்பர தூதராக நியமித்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி – அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றம் பகுதியை தொடங்கவுள்ள நிலையில் தனது தனித்துவமான பேச்சில் எடுத்துரைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி சென்னை நகர மக்களே, இது போன்ற எதையும் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் – சேலஞ்சுக்கு ரெடியா’ என்ற காம்பைங் மூலம் அக்கட்டும்மானத்தின் மிகக் குறைந்த விலை மற்றும் ஏராளமான சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
தென்னிந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பு பிரிவில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பக தன்மை வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்து வரும் காசாகிராண்ட் சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 110-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை நிறுவி உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த விலையில் ஏராளமான வசதிகளுடன் அருமையான வீடுகளை கட்டி விற்பனை செய்வதன் மூலம் இந்நிறுவனம் மக்களின் நேசத்துக்குரிய மற்றும் மிகவும் விருப்பமான நிறுவனமாக உள்ளது. வீடு வாங்குபவர்கள் உடனான பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்நிறுவனம் தனது ‘காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி’ திட்டத்திற்காக புகழ்பெற்ற நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உடன் இணைந்துள்ளது.
சோழிங்கநல்லூரில் இருந்து 5 நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு வீடு வாங்குபவர்களுக்கு ஆடம்பரமான மற்றும் சொகுசான வாழ்க்கையை வழங்கும். உன்னதமான ரோமானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு வீடு வாங்குபவர்களுக்கு இணையற்ற வாழ்க்கை முறையை குறைந்த விலையில் அதாவது ஒரு சதுர அடி 3999 ரூபாயில் வழங்குகிறது. இந்தப் பகுதியில் குறைந்த விலையில் வீடுகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு 15 ஏக்கரில் 1693 பிரீமியம் ரக 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகளைக் கொண்டுள்ளது. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. இங்கு வீடு வாங்குபவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்க இங்கு 1.5 ஏக்கரில் கிளப் ஹவுஸ் அமையவிருக்கிறது. 5 ஏக்கர் பசுமை புல்வெளியுடன், வாகன போக்குவரத்து இல்லாமல் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்கு ஏற்ற வகையில் இந்த குடியிருப்பு கட்டப்படுகிறது. பேஸ் 1 திட்டம் வீடு வாங்குபவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2-வது திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை 49 லட்ச ரூபாய் முதல் துவங்குகிறது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய காசாகிராண்ட் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு அருண் Mn கூறுகையில், “புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கான தரத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறோம். இதன் காரணமாக உயர்ரக வீடுகள் என்றாலே எங்கள் நிறுவனம் அனைவராலும் அறியப்படும் ஒரு நிறுவனமாக உள்ளது. வீடு வாங்கும் ஒவ்வொருவரின் உழைப்பயும்
நாங்கள் நன்கு புரிந்து வைத்துள்ளோம். அவர்கள் தங்களின் கனவு வீட்டிற்காக வாழ்நாள் முழுவதும் சேமிக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆடம்பர வாழ்க்கை முறையை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் காரணமாக வீடு வாங்குபவர்களுக்கான மிகவும் விருப்பமான தேர்வாக காசாகிராண்ட் உள்ளது. இதனால் தென்னிந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகவும் தென்னிந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மிகவும் நம்பகமான நிறுவனமாகவும் எங்கள் நிறுவனம் உள்ளது என்று தெரிவித்தார்”.
இது குறித்து காசாகிராண்ட் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் திரு விமேஷ் கூறுகையில், “விஜய் சேதுபதி மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகர் ஆவார். குறைந்த விலையில் ஒரு ஆடம்பரமான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் கனவுகளை காசாகிராண்ட் நிறைவேற்றுகிறது என்பதை அவரது பிரச்சாரம் வெளிப்படுத்துகிறது. எங்களின் காசாகிராண்ட் பர்ஸ்ட்சிட்டி குடியிருப்பு திட்டம் இங்குள்ளவர்களிடமும் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு உள்ள ஏராளமான வசதிகள், இதன் வடிமைப்பு, குறைந்த விலை ஆகியவை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான புதிய அளவுகோலை கொண்டு வந்துள்ளது. விஜய் சேதுபதி எங்களின் இந்த திட்டத்திற்கான விளம்பர தூதராக இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.”
வீடு வாங்க விரும்பும் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த விளம்பரம் பத்திரிக்கை மற்றும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும். இந்த திட்டம் TN/01/BUILDING/0114/2021 என்ற எண்ணின் கீழ் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காசாகிராண்ட்குறித்து: 2004-ம் ஆண்டில் ஒரு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட காசாகிராண்ட், மக்களின் விருப்பங்களுக்கு வடிவம்தந்து மதிப்பினை வழங்குவது மீது வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கும், ISO சான்றிதழ் பெற்ற ஒருரியல் எஸ்டேட் பெரு நிறுவனமாகும். சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 30 மில்லியன் சதுரஅடிக்கும் கூடுதலாக முதன்மையான குடியிருப்புத் திட்டங்களை இந்நிறுவனம் உருவாக் கிவழங்கியிருக்கிறது . இந்நகரங்களில் 110-க்கும் அதிகமான சிறப்பான குடியிருப்பு வளாகங்களில் ஆனந்தமாக வாழ்க்கையை நடத்திவரும் 21250-க்கும் அதிகமான குடும்பங்கள், காசாகிராண்டின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் தரம்வாய்ந்த செயல்பாட்டுக்கும் சாட்சியமாக திகழ்கின்றன. எமது நம்பிக்கையை பிரதிபலிக்கிற உயர்தரமான வாழ்க்கை அமைவிடங்களை உருவாக்குவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது தொழில் முறைபயணத்தில் 16-வது ஆண்டில் வெற்றிநடை போடும் காசாகிராண்ட், நிலைத்துநிற்கும் மதிப்பு, நேர்மை மற்றும் தரம் ஆகியவற்றோடு ரூ. 8000 கோடி மதிப்பில் புதிய செயல் திட்டங்களை மேற்கொண்டுவருகிறது