~ The first copy of the coffee table book was presented to Isaignani Mastero Ilaiyaraaja~
Chennai, 17th July 2024: Bringing together the healing powers of Ayurveda and Music, Medimix Family unveiled Soapera, an exclusive coffee table book capturing the 55 years journey of the brand Medimix – India’s leading ayurvedic personal care brand. The first copy of the book was presented to Maestro Ilaiyaraaja by Dr. A V Anoop, Managing Director, AVA Cholayil Healthcare Pvt Ltd, and Mr.V.S.Pradeep .Managing Director Cholayil during a private event held in the city.
Soapera is an exquisite coffee table book, curated by the makers of Medimix, that captures the illustrious history and the 55 year old transformative journey of Medimix. The book encapsulates the inspiring journey of Dr VP Sidhan’s quest to unlock the power of ayurveda.

Commenting on the occasion, Mr. A V Anoop, Managing Director, AVA Cholayil Healthcare Pvt Ltd, said “We are happy to launch Soapera that beautifully captures the vision and purpose with which Dr. V.P. Sidhan started the journey of Medimix. The book encapsulates the diverse interests of our founder and his entrepreneurial foresight of the future of ayurveda. We are proud to bring notable moments from the 55 years of Medimix’s journey to give an insight into the rich legacy of our brand that is a fond household name today.”
Adding to this, Mr. Anoop said “The journey of Medimix from a small, homegrown product into a successful, global brand speaks volumes about the leadership of Dr. V P Sidhan and his wife Mrs.Sowbagyam. This would have not been possible without the continuous support of our Distributors ,vendors and employees. The book captures insights and contributions of the strong support ecosystem that helped make Medimix an unparalleled leader. We wanted to share our gratitude for each of their support through this book. Soapera is truly an inspiring read and is filled with lessons for emerging entrepreneurs.”

The coffee table book – Sopera, is a meticulously crafted tribute to the remarkable journey of Medimix and its visionary founders, Dr. VP Sidhan and Mrs.Sowbagyam. The book offers a visual and narrative tribute to Medimix’s heritage, chronicling its inception, growth, and the profound impact it has had on the lives of millions. Founded by Dr. VP Sidhan, Medimix has been a household name for generations, known for its authentic ayurvedic formulations that blend tradition with modernity.

Delving into the founding years, the book narrates the inspiring story of how Medimix was conceived to address the skin rashes of railway employees through the healing power of Ayurveda. It provides a vivid portrayal of Dr. VP Sidhan’s diverse interests and profound dedication to Ayurvedic principles, alongside Sowbagyam’s instrumental role in bringing his vision to life and taking Medimix to countless households. Through rich visuals and engaging narratives, the book chronicles the early challenges, milestones, and the unwavering commitment that transformed Medimix and AVA Cholayil from a small-scale initiative into a renowned Ayurveda-based conglomerate. This beautifully illustrated volume is not only a celebration of Medimix’s legacy but also a testament to the enduring partnership and shared dream of Dr. VP Sidhan and Sowbagyam.

About AVA Group: At AVA Group, we are committed to tackling healthcare and wellness challenges naturally, exemplified by our flagship brand, Medimix. Our philosophy of care motivates us to help people lead healthier lives. We prioritize environmentally conscious production, optimizing raw materials, packaging, and manufacturing processes with advanced machinery. Our in-house R&D department, accredited by the Department of Science and Industrial research (Govt of India) ensures stringent quality control for all our products, establishing trust and reliability in the market.

மெடிமிக்ஸ் வழங்கும் சோப்எரா
உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆயுர்வேத சோப்,
மெடிமிக்ஸ் – ன் வளமான பாரம்பரியத்தை விவரிக்கும் ஒரு காஃபி டேபிள் புத்தகம்
~ இந்த காஃபி டேபிள் புத்தகத்தின் முதல் பிரதி இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களிடம் வழங்கப்பட்டது~
சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தி யாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு பிராண்டான மெடிமிக்ஸ் – ன் 55 ஆண்டுகால சிறப்பான பயணத்தை சித்தரிக்கும் ஒரு பிரத்யேக காபி டேபிள் புத்தகத்தை சோப்எரா (Soapera) என்ற பெயரில் மெடிமிக்ஸ் குடும்பம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இந்த நேர்த்தியான புத்தகத்தின் முதல் பிரதியை, சென்னை மாநகரில் இன்று நடைபெற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வின்போது AVA சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். AV. அனூப் மற்றும் சோலையில் – ன் நிர்வாக இயக்குனர் திரு. V.S. பிரதீப் ஆகியோர் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் நேரில் வழங்கினர்.
சோப்எரா என்பது, மெடிமிக்ஸ் தயாரிப்பாளர்களால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான காபி டேபிள் புத்தகமாகும். அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து மெடிமிக்ஸ் – ன் சிறப்பான வரலாற்றை 55 ஆண்டுகால சாதனை பயணத்தையும் இது அழகாக சித்தரிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு மைய அம்சமான, ஆயுர்வேதத்தின் ஆற்றலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் டாக்டர். VP. சித்தன் அவர்கள் தொடங்கிய தேடலையும், உத்வேகமளிக்கும் பயணத்தையும் இப்புத்தகம் தொகுத்து வழங்குகிறது.
AVA சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். AV. அனூப், இந்நிகழ்வின்போது பேசுகையில், “மெடிமிக்ஸ் – ன் பயணத்தை டாக்டர். V.P. சித்தன் அவர்கள் தொடங்கிய குறிக்கோளையும் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் அழகாக படம்பிடித்து காட்டும் சோப்எரா என்ற இப்புத்தகத்தை தயாரித்து வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது நிறுவனராக டாக்டர். V.P. சித்தன் அவர்களின் மாறுபட்ட பல்வேறு ஆர்வங்களையும் மற்றும் ஆயுர்வேதத்தின் எதிர்காலம் குறித்து இவரின் தொழில்முனைவு சார்ந்த முன்கணிப்பையும் இப்புத்தகம், நேர்த்தியாக எடுத்துக்கூறுகிறது. இன்றைய தினம் நாடெங்கிலும் அனைத்து குடும்பங்களும் அறிந்த மற்றும் தினசரி பயன்படுத்தும் ஒரு பிராண்டாக மெடிமிக்ஸ் உருவெடுத்திருக்கும் நிலையில், அதன் செழுமையான பாரம்பரியம் பற்றிய கண்ணோட்டத்தை இப்புத்தகம், வழங்குகிறது. மெடிமிக்ஸ் – ன் 55 ஆண்டுகள் பயண வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணங்களையும், சாதனை நிகழ்வுகளையும், வளர்ச்சி மைல்கற்களையும் சுட்டிக்காட்டி வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்று கூறினார்.
திரு. அனூப் மேலும் கூறியதாவது: “சிறிய அளவில் தொடங்கப்பட்ட மெடிமிக்ஸ் இன்றைக்கு ஒரு வெற்றிகரமான, உலகளாவிய பிராண்டாக மாபெரும் வளர்ச்சியை எட்டியிருப்பது டாக்டர். V.P. சித்தன் மற்றும் அவரது மனைவி திருமதி. சௌபாக்கியம் அவர்களின் தலைமைத்துவ பண்புகள் குறித்தும் தொழில்முனைவு திறன்கள் குறித்து எடுத்துரைக்கிறது . எமது வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு இல்லாமல் இந்த வளர்ச்சியும், வெற்றியும் சாத்தியமாகியிருக்காது. ஒரு நிகரற்ற தலைவராக மெடிமிக்ஸ் – ஐ நிலைநிறுத்த உதவியிருக்கின்ற வலுவான ஆதரவு சூழலமைப்பின் பங்களிப்புகளையும் மற்றும் மதிப்புமிக்க கண்ணோட்டங்களையும் இந்த காபி டேபிள் புத்தகம் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. இப்புத்தகத்தின் வழியாக, ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கிய ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை பகிர்ந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். சோப்எரா என்ற இந்த புத்தகம், சுவாரஸ்யமான தகவல்களுடன் உத்வேகத்தையும் சேர்த்து வழங்கக்கூடியது. புதிய தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டுகின்ற ஆலோசனை குறிப்புகளையும், கற்பிதங்களையும் இது கொண்டிருக்கிறது.”
சோப்எரா என்ற இந்த காபி டேபிள் புத்தகம், மெடிமிக்ஸ் மற்றும் அதன் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனர்கள் டாக்டர். VP சித்தன் மற்றும் திருமதி. சௌபாக்கியம் ஆகியோரின் சாதனை பயணத்திற்கு ஒரு அஞ்சலியாக சமர்ப்பிக்கும் வகையில் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடக்கம், வளர்ச்சி மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இது ஏற்படுத்தியிருக்கும் ஆழமான தாக்கம் ஆகியவற்றை காலவரிசைப்படி தொகுத்து மெடிமிக்ஸ் – ன் பாரம்பரியத்தையும், பயணத்தையும் பார்வைக்கும், மனதிற்கும் ஒரு விருந்தை வழங்குவதாக இப்புத்தகம் இருக்கிறது. டாக்டர். VP சித்தன் அவர்களால் நிறுவப்பட்ட மெடிமிக்ஸ், பல தலைமுறைகளாக அனைத்து குடும்பங்களும் அறிந்த ஒரு பிராண்டாக வளர்ச்சி கண்டிருக்கிறது. பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்திருக்கும் மெடிமிக்ஸ், அதன் உண்மையான ஆயுர்வேத பண்பியல்புகளுக்காகவும் மற்றும் அதன் பலன்களுக்காகவும் மக்களின் பேராதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது.
ஆயுர்வேதத்தின் குணமாக்கும் ஆற்றலின் வழியாக இரயில்வே தொழிலாளர்களின் சரும பாதிப்புகள் மற்றும் புண்களை சரிசெய்ய ஒரு நிவாரணத்தீர்வாக எப்படி மெடிமிக்ஸ் உருவாக்கப்பட்டது என்ற உத்வேகமளிக்கும் வரலாற்றை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. டாக்டர். VP. சித்தன் அவர்களின் மாறுபட்ட பல்வேறு ஆர்வங்கள் மற்றும் ஆயுர்வேத அடிப்படை அம்சங்கள் மீது அவர் கொண்டிருந்த மிக ஆழமான அர்ப்பணிப்பை மிக தெளிவாக இப்புத்தகம் சித்தரிக்கிறது. அவரது கனவை நிஜமாக்கவும் மற்றும் மெடிமிக்ஸ் சோப்பை எண்ணற்ற இல்லங்களுக்கு எடுத்துச்செல்ல உதவ, அவரது மனைவி திருமதி. சௌபாக்கியம் ஆற்றிய முக்கியமான பங்கையும் இது விவரிக்கிறது. சிறப்பான படங்கள் மற்றும் ஆர்வமூட்டுகின்ற விவரணைகள் மூலம் மெடிமிக்ஸ் சந்தித்த ஆரம்பகால சவால்கள், எட்டிய மைல்கற்கள் மற்றும் தளராத பொறுப்புறுதியை காலவரிசைப்படி இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. ஒரு சிறிய நிறுவனத்தின் தொழில்முயற்சியை உலகளவில் புகழ்பெற்ற மற்றும் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்ட மாபெரும் நிறுவனமாக மாற்றிய வரலாற்றை இது வழங்குகிறது. அழகான படங்களைக் கொண்ட இப்புத்தகம், மெடிமிக்ஸ் – ன் பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்கிறது; அதுமட்டுமின்றி, டாக்டர். V.P. சித்தன் மற்றும் திருமதி. சௌபாக்கியம் ஆகியோரின் வலுவான கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட இலட்சிய கனவுகளுக்கு ஒரு நேர்த்தியான சாட்சியமாகவும் இப்புத்தகம் திகழ்கிறது.
AVA குழுமம் குறித்து: AVA குழுமத்தில் உடல்நல பராமரிப்பு மற்றும் நலவாழ்விற்கான சவால்களை இயற்கை வழிமுறையின் மூலம் சமாளிப்பதில் நாங்கள் எங்களை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறோம். எமது முதன்மை பிராண்டான மெடிமிக்ஸ், எமது குறிக்கோளுக்கும், செயல்பாட்டிற்கும் நேர்த்தியான சான்றாகும். உடல்நல பராமரிப்பு குறித்த எமது கொள்கையும், கோட்பாடும் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் நடத்துவதற்கு உதவ எங்களை தூண்டி உற்சாகமளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட உற்பத்திக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் பேக்கேஜிங் – ஐ சுற்றுச்சூழலுக்கு ஆதரவானதாக நாங்கள் மேற்கொள்கிறோம். மிக நவீன இயந்திரங்களின் மூலம் எமது தயாரிப்புகளின் உற்பத்தி செயல்முறைகள் நடைபெறுகின்றன. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி துறையின் அங்கீகாரம் பெற்ற எமது உள்ளார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை, எமது தயாரிப்புகள் அனைத்திலும் கண்டிப்பான தரக்கட்டுப்பாடு நடைமுறைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. தரத்தின் மீதான இந்த பொறுப்புறுதியே கோடிக்கணக்கான மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற பிராண்டாக மெடிமிக்ஸ் – ஐ நிலைநாட்டியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here