புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.05 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சுற்றுலா வழிகாட்டும் நிகழ்ச்சி ‘I am a Traveller’.
புதிய இடங்களை தேடித்தேடி பயணித்து அதனை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சென்னையின் பிரபலமான இடங்களும், சென்னையில் இதுவரை பலர் பார்க்காத இடங்களும் படப்பதிவு செய்யப்படுவது இதன் தனிச்சிறப்பு. இந்த நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள வித்தியாசமான ,புதுமையான சுற்றுலா தலங்களை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தின் தனிதன்மை குறித்தும் பிரத்தியேகமாக எடுத்து கூறி அவற்றை மக்களுக்கு வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொகுப்பாளர் பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.