தமிழ்த்தாய் வாழ்த்து க்குப்பின்
குத்து விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி
வியாசர் நலச்சங்க அறக்கட்டளை நிர்வாகிகளால் அரங்கேறியது.
தொடர்ந்து வியாசர் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வாக நிர்வாகிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.

வியாசர் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி
திரு K.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் திரு. K. சங்கர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

வியாசர் அறக்கட்டளையின் தொடக்க விழாவில் ஆன்லைன் இணைய செயலி வெளியீடு நடைபெற்றது… வியாசர் அறக்கட்டளையின் சேர்மன் திரு G.P.சாமி,மேனேஜிங் டிரஸ்டி கே.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட, முதல் செயலியை அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசிய தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அறங்காவலர்கள் அனைவருக்கும் வியாசர் அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து திரைப்பட இயக்குனர் திரு.சுராஜ்,திரு இரவிக்குமார் , திரு இராஜா, திரு தர்மராஜ்,திரு முருகன், திருமதி விஜயலட்சுமி,திரு சகாதேவன்,
திரு.கஜேந்திரன் உள்ளிட்ட அறங்காவலர்கள் உடன்,அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் இதய கீதம் இராமானுஜம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

பொருளாளர் திரு. R.வெங்கடேசன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். அப்போது அறங்காவலர்கள் திரு டில்லி பாபு, திரு ஜெகதீசன் இருவரும் தலா ஒரு லட்சம் என்று இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

துணைத்தலைவர் திரு.துபாய் V.ராஜேந்திரன் அவர்கள் பரப்புரை ஆற்றினார்.

செயல் விளக்கவுரையை
ஊடகத்துறைச் செயலாளர் திரு. R.சிவகுமார் அவர்கள் நிகழ்த்தினார்.

துணைச்செயலாளர் திரு. M.G. ராமசந்திரன் அவர்கள்,
சமூகசேவை செயலாளர் திரு. D.இராஜாராம் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்புரை:
வியாசர் அறக்கட்டளையின் சேர்மன் மற்றும் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. G.P. சாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

நிறைவாக துணைத்தலைவர்
திரு. A.C. முருகேசன் அவர்கள் நன்றி நவில,
விழாவில் நிறைவாக அறங்காவலர்கள் திரு டில்லி பாபு மற்றும் திரு ஜெகதீசன் ஆகியோர் வியாசர் அறக்கட்டளையின் அனைத்து அறங்காவலர் களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தொடர்ந்து அனைவரின் வாழ்த்துகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here