The iconic actor Jayaram presided the special event of ‘Bharat Yathra’ campaign curtain-raiser event held in Chennai. The occasion was so special as it centers around the message of ‘Social Inclusion of Persons with Disabilities’, which will materialized as a travel awareness campaign from Kanyakumari to Kashmir by ‘The Different Arts Centre’, Thiruvananthapuram, under the leadership of Sri. Gopinath Muthukad.

Actor Jayaram, who was present for the event congratulated the entire team behind this initiative, and shared his heartiest praises for Ministry of Social Justice, Govt. of India for supporting this great cause. The campaign will commence from Kanyakumari on 6th October 2024 and will be culminated at New Delhi on 3rd December 2024.

While actor Jayaram presided over the event as Chief Guest, the Guest of Honour were Gokulam Gopalan, Praveen, Anwar,Anoop & Nandagovind.

‘பாரத் யாத்ரா’ நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்!

சென்னையில் நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் ‘Social Inclusion of Persons with Disabilities’ என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடையும்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here