A Grand Celebration of Culture, Festivity, and Women Empowerment!
Chennai, 04 October 2024: Vijay TV is all set to bring back its much-awaited festive event, ‘Navarathri Kondattam 2024’, a spectacular celebration of Navratri that promises to be even bigger and more exciting this year. Known for celebrating the essence of this vibrant festival with grandeur, Vijay TV is ready to engage with fans across Tamil Nadu from 4th to 10th October 2024.
Navratri marks the victory of good over evil, and Vijay TV, with its tradition of celebrating this auspicious time, is pulling out all the stops to make this year’s event a memorable one. The ‘Navarathri Kondattam’ event last year saw immense success and won prestigious awards from Maddys, e4m, and Promax, and this year promises to surpass all expectations.
This year, the festival will celebrate women, with a variety of entertainment activities lined up for women, children, and seniors alike. Starting from Madurai, Tirunelveli, Trichy, Erode, Thanjavur, Kanchipuram, and Chennai, the grand celebrations will touch the hearts of people across Tamil Nadu.
Highlights of ‘Navarathri Kondattam 2024’

  • Decorative Arrangements & Celebrity Selfie Spots: The venues will be decked up with creative arches, traditional Chendai Melam for a grand welcome, and giant cut-outs of your favorite stars for fans to take selfies. The famous cutouts from Siragadikka Aasai and Pandian Stores etc., will be a key attraction!
  • Flower Shop: Remembering the iconic character Meena, there will be a dedicated flower shop at all the venues where fans can relive the magic of Siragadikka Aasai.
  • Temple on Wheels: A unique feature of this year’s event is the innovative ‘Temple on Wheels’. This mobile temple will move around the city with a beautifully adorned Goddess Devi’s idol, offering pooja services and entertaining fans from morning until evening, culminating at the event venue with grand fanfare.
  • Vilakku Pooja & Kolu: A special Vilakku Pooja will be organized for all the women attendees, who only need to bring a lamp, as the rest of the pooja essentials will be provided. A stunning Kolu display will also grace the venue, adding to the festive spirit.
  • Super Singer Performances: Fans of Super Singer are in for a treat as some of the most popular faces from the show will deliver electrifying performances during the event.
  • Fun Games & Prasadam: Engage with exciting interactive sessions, fun-filled games, and win exciting prizes! Don’t miss out on the special prasadam prepared by the renowned Chef Damu, which will be distributed to everyone attending the event.
    Star Performances
    Artistes from various popular Vijay TV shows, including VJ Deepika, Vinusha, Swetha, Jeevitha, Shreenitha, Harshini, and Yogadharshini, will be performing throughout the event, adding a special touch to the celebrations. Prominent characters from Vijay TV’s popular shows are expected to attend the event.
    Event Schedule & Venue Details
  • 04 October: Madurai – ADR MAHAL, Kamarajar Salai, Meenakshi Nagar, Madurai.
  • 05 October: Tirunelveli – KAVIN Mahal, EBA Garden, Pothigai Nagar, Opp. DSE Matriculation School, Perumalpuram, Tirunelveli.
  • 06 October: Trichy – TAJMAHAL, Karur Bypass Road, Killa Chinthamani, Trichy.
  • 07 October: Erode – Vivaha Lakshmi Mahal, Periya Semur Village, Erode.
  • 08 October: Tanjore – Pragadhamani Mahal, Vannakkara Street, Maharnonhu Chavadi, Tanjore.
  • 09 October: Kanchipuram – NG Palace, Vandhavasi Road, Sevilimedu, Kanchipuram.
  • 10 October: Chennai – SRI GAJALAKSHMI KALYANA MANDAPAM, Poonamallee High Road, Velappanchavadi, Thiruverkadu, Chennai.
    Navarathri Kondattam promises to be an unmissable event, packed with excitement, entertainment, and vibrant cultural activities. Bring your family and friends and immerse yourself in this grand celebration of devotion and festivity.
    Join us from 04th to 10th October 2024 in cities across Tamil Nadu and make this Navarathri a celebration to remember!

விஜய் டிவி வழங்கும் ‘நவராத்திரி கொண்டாட்டம் 2024’
கலாச்சாரம், பண்டிகை மற்றும் பெண்மையை கொண்டாடும் விழா!
சென்னை, 04 அக்டோபர் 2024: விஜய் டிவி, தன்னுடைய பிரபலமான பண்டிகை நிகழ்வான ‘நவராத்திரி கொண்டாட்டம் 2024’ நிகழ்ச்சியை மீண்டும் கொண்டாடத் தயாராக உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரியின் அதி பெரிய மற்றும் சிறப்பு கொண்டாட்டமாக இருக்கப்போகும் இந்த நிகழ்ச்சி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 10 வரை தமிழகமெங்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது.
நவராத்திரி என்பது நல்லவை தீயவை மீதான வெற்றியை குறிக்கின்றது, இந்த நிகழ்வை மிகுந்த சிறப்புடன் கொண்டாடும் விஜய் டிவி, இந்த ஆண்டையும் இன்னும் சிறப்பாக்க பல நவீன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடம் நடந்த ‘நவராத்திரி கொண்டாட்டம்’ நிகழ்வு மிகப்பெரிய வெற்றியடைந்தது மற்றும் மாடிஸ், e4m, மற்றும் ப்ரோமாக்ஸ் விருதுகளை வென்றது. இந்த ஆண்டும் கடந்தவற்றை மீறி அதிக ஆவலோடு அனைவரும் எதிர்பார்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த வருட நிகழ்ச்சியில் பெண்களை முன்னிறுத்தி, பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஏற்றவாறு பலவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த விருந்தினரை வரவேற்கவுள்ளது.
‘நவராத்திரி கொண்டாட்டம் 2024’ நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

  • அலங்காரத் திட்டங்கள் & பிரபலங்களின் செல்பி ஸ்பாட்கள்: விழா நடைபெறும் இடங்களில் ஆடம்பரமான வளைவுகள், செந்தை மேளம் போன்ற பாரம்பரிய வரவேற்பு ஏற்பாடுகள், ரசிகர்கள் தங்கள் விருப்பமான பிரபலங்களின் காட்சிகளைப் பார்த்து செல்பி எடுக்க நிறையக் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கதாபாத்திரங்களின் புகைப்படங்களுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையலாம்!
  • பூக்கடை: சிறகடிக்க ஆசை தொடரின் மீனா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாக, நிகழ்ச்சி இடங்களில் பூக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு ரசிகர்கள் பூ வாங்கி மகிழலாம்.
  • ‘தேவியின் கோவில் வேன்’: இந்த ஆண்டின் இன்றியமையாத சிறப்பம்சமாக இருக்கும் ‘தேவியின் கோவில் வேன்’, நகரத்திலுள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று, பக்தர்களுக்கு பூஜை சேவைகளை வழங்கும். நிகழ்வு நடைபெறும் மாலையில் இதுவே நிகழ்வு இடத்திற்கு வந்து வெற்றிகரமாக நிறைவடையும்.
  • விளக்கு பூஜை & கொலு: பெண்களுக்கு சிறப்பு விளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் விளக்கை மட்டும் கொண்டு வந்தால் போதும், பூஜை பொருட்கள் நிகழ்விடத்தில் வழங்கப்படும். பாரம்பரிய கொலு கண்காட்சியும் இடத்தை அழகுபடுத்தும்.
  • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரபலங்கள் சிலர், நிகழ்ச்சியில் மெய்சிலிர்க்க வைக்கும் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
  • மகிழ்வுத் தரும் விளையாட்டுகள் & பிரசாதம்: ஆர்வமுள்ள ரசிகர்களுக்கான கலந்துரையாடல், விளையாட்டு நிகழ்ச்சிகள், பரிசுகள் என நிறைந்தது. மேலும் சேஃப் டாமு தயாரிக்கும் சிறப்பு பிரசாதம், நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும்.
  • விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் இருந்து, வி.ஜே தீபிகா, வினுஷா, சுவேதா, ஜீவிதா, ஸ்ரீநிதா, ஹர்ஷினி, மற்றும் யோகதர்ஷினி ஆகிய பலர் நிகழ்வின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, விழாவிற்கு சிறப்பு சேர்க்கவுள்ளனர். மற்றும் விஜய் டிவி யின் பிரபல தொடர்களில் இருந்து முக்கிய கதாபாத்திரங்கள் வருகை தரவிருக்கின்றனர்
    நிகழ்ச்சி விபரங்கள் & இடம்
  • 04 அக்டோபர்: மதுரை – ஏடிஆர் மஹால், காமராஜர் சாலை, மீனாட்சி நகர், மதுரை.
  • 05 அக்டோபர்: திருநெல்வேலி – கவின் மஹால், ஈபா கார்டன், பொதிகை நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி.
  • 06 அக்டோபர்: திருச்சி – தாஜ்மஹால், கரூர் பைபாஸ் சாலை, கில்லா சிந்தாமணி, திருச்சி.
  • 07 அக்டோபர்: ஈரோடு – விவாக லட்சுமி மஹால், பெரிய சேமூர் கிராமம், ஈரோடு.
  • 08 அக்டோபர்: தஞ்சாவூர் – பிரகதமணி மஹால், வண்ணக்கார தெரு, மஹர்ணொன் சாவடி, தஞ்சாவூர்.
  • 09 அக்டோபர்: காஞ்சிபுரம் – என்.ஜி. பேலஸ், வந்தவாசி சாலை, செவிலிமேடு, காஞ்சிபுரம்.
  • 10 அக்டோபர்: சென்னை – ஸ்ரீ கஜலட்சுமி கல்யாண மண்டபம், பூனமல்லி ஹை ரோடு, வேலப்பன்சாவடி, திருவேற்காடு, சென்னை.
    நவராத்திரி கொண்டாட்டம், திருவிழா, கலாசாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய நிகழ்வாக, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, இந்த நவராத்திரியை மறக்க முடியாத அனுபவமாக்குங்கள்!
    04 அக்டோபர் முதல் 10 அக்டோபர் 2024 வரை தமிழ்நாடு முழுவதும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here