மன அழுத்தத்தால் கொலை, கொள்ளை! – எச்சரிக்கும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால்! – பீதியை கிளப்பும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’

மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது. ‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ Influenza Virus கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது. ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் – ‘தி புக் ஆஃப் ஏனோக்’ The Book of Enoch படத்தின் கதை.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.  ‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் வெயிலோன் இயக்குகிறார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு  பிரவீன் எஸ்.ஏ இசை அமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, திருத்தணி, வேலூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here