மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை இயக்கி இருக்கின்றனர். திரைக்கதை வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாறன் செய்ய, புரொடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா (SYNC CINEMA) செய்ய, மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்கின்றனர். விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here