இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார்.

மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here