இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.
திமுக அரசால் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்கள் ஏமாற்றப்படுவதையும், கடந்த சட்டமன்ற தேர்தல் அளிக்கப்பட்ட பொய் வாக்குறுதிகளை மறந்து, தமிழக மக்களை வஞ்சித்ததால், கொலை கொள்ளை, போதை, ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,திமுக ஆட்சி அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன். நாளை என் வீட்டு முன் என்னை நானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப் போகின்றேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பு, தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைக்கப் போகிறது.
மேலும் தமிழகத்தின் இருண்டகால திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதத்தில், நாளை முதல் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பாஜக சார்பாக மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அண்ணாமலை அவர்களின் அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு அமைதிப் புரட்சியை உண்டாக்கும்.
மேலும் தமிழகத்தின் நலம் காக்க 48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை முருகனிடம் முறையிட உள்ள அண்ணாமலை அவர்களின் கோரிக்கை கந்த சஷ்டி கவச நாயகன் முருகன் அருளால் நிறைவேறும்.
தலைவர் அண்ணாமலை அண்ணாமலை அறிவித்த போராட்டங்களின்
முன்னோட்டமாக, தமிழக பாஜக சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலில், பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று
நீதி கேட்டு இன்று
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டின் அடையாளம். அங்குள்ள மிகப் பழமையான கிண்டி பொறியியல் கல்லூரியில் படிப்பது என்பது தமிழக மாணவர்களின் கனவு. அப்படிப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு அவமானம். தமிழகத்தை ஆளும் திமுக அரசிம், உயர் கல்வித் துறையின் மிகப்பெரிய தோல்வி.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகி இருப்பதும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள் இல்லை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சூழலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையின் நகல் சமூக ஊடகங்கலில் கசிய விடப்பட்டுள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்தில் திமுக அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதை கண்டித்து ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக முன்னாள் தலைவர், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை திமுக. அரசின் காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அமைதி வழியில் போராடுபவர்களை ஒடுக்க பயன்படுத்திய காவல்துறையினரில் கொஞ்சம் பேரை அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்புக்கு பயன்படுத்தியிருந்தால் மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது. எனவே உண்மையை மறைக்க முயற்சிக்காமல், உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும்.