7 MILES PER SECOND நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலா சரவணன், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வித்தியாசமான காதல் கதை கொண்ட திரைப்படம் மிஸ் யூ. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது. குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின், 2024 ல் வெளியான சிறந்த 20 திரைப்படங்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது. காதல், காமெடி, ஆக்‌ஷன் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் பாடல்களுக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். N.ராஜசேகரன் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. தற்போது AMAZON PRIME OTT யில் இப்படம் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here