காமம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வு. ஆனால் பெண்ணுக்கு மட்டும் அது சமூகம் சார்ந்த ஒழுக்க நெறி. ஆணுக்கு பந்தம் ஒரு கால் கட்டு என்று சொல்லப்படுகிறது ஆனால் பெண்ணின் பிறப்பே கட்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது. தமிழின் பல கெட்ட வார்த்தைகள் பெண்ணின் காமம் , பெண்ணுறுப்பு சார்ந்ததாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவளின் காமம் குடும்பம் கற்பு என்று வட்டத்திற்குள் வரையறுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சமூகத்தின் அடித்தளம் என்றே கூட அதை சொல்லலாம். அது மெல்ல மெல்ல மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பதும் உண்மை. அப்படிப்பட்ட ஒரு மாற்று சூழலுக்குள் ஊடாடும் ஒரு பெண்ணைப் பற்றிய காதலர்களைப் பற்றிய ஒரு பதிவுதான் இந்த படம்… சொல்ல வந்ததை திரைப்படத்திற்கு உண்டான மேக்கிங்கில் சொல்லி இருப்பதற்கு கண்டிப்பாக இயக்குனரை பாராட்ட வேண்டும். எமோஷனலாகக மட்டுமல்லாமல் அறிவு சார்ந்து காமம் குறித்து நிறைய விவாதிக்கப்பட வேண்டும்… படக்குழுவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!