HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கி ஒப்பற்ற பணிகளை செய்து வருகிறது, சென்னை கொளத்தூரை சேர்ந்த “இந்தியா பாசிட்டிவ் நெட்ஒர்க் அறக்கட்டளை”.
HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக தேவைப்படும் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னால் ௹10 லட்சம் நிதி வழங்கியது. அந்த கட்டிடம் கட்டி இப்பொழுது திறப்பு விழா காண இருக்கிறது.
இது சார்பாக இன்று, அறக்கட்டளையின் தலைவி Dr.நூரி, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களை சங்க அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். காப்பகம் கட்டிடம் கட்ட, முதல் நன்கொடையாக வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும்
நன்றி தெரிவித்தார். அத்துடன் காப்பகத் திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார்.