Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது…
Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம்.
உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்த்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வழக்கறிஞராக பணியாற்றிய S சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது.
உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு கொண்டு வரும் வேலைகள், தற்பொது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழு
இயக்கம் : S சிவராமன்
தயாரிப்பு: Foot Steps Production
இணை தயாரிப்பு: Kothari Madras International Limited
இசை: சௌரப் அகர்வால்
ஒளிப்பதிவு : TS பிரசன்னா
எடிட்டர்: G தினேஷ்
பாடியவர்: கலை குமார்
கலை இயக்குனர்: மணி
நடன இயக்குனர்: அபு & சால்ஸ் சண்டைக்காட்சிகள்: தீ கார்த்திக்
வசனம் : எஸ் சிவராமன்
ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS)
ஃபோலே வடிவமைப்பாளர்: R.ராஜ் மோகன்
டப்பிங் மற்றும் மிக்சிங் : DAW RECORDS
டப்பிங் இன்ஜினியர்: வசந்த்
DI & VFX: Fire Fox Studios
போஸ்டர் : வியாகி
ஸ்டில்ஸ்: நவின் ராஜ்
டைட்டில் வடிவமைப்பு: சசி & சசி விளம்பர கட்ஸ் : அரவிந்த் B ஆனந்த்
ஒப்பனை: பாரி, கயல்
மக்கள் தொடர்பு : வேலு. S
புரமோசன் : Starnest Media
தயாரிப்பு நிர்வாகி: ரகுவரன்