Veteran actor Kannan, known for his unforgettable role in Kadhal Oviyam, makes a powerful return to the big screen with Shakthi Thirumagan. After years away from the limelight, Kannan steps into a pivotal role in this much-anticipated film, raising curiosity about his performance and the impact of his character. His return is set to be a major highlight, adding emotional depth and nostalgia to the movie.

Directed by Arun Prabu, the filmmaker behind Aruvi and Vaazhl, Shakthi Thirumagan blends intense family drama, action, and emotions. This film is set to be a landmark in Vijay Antony’s career, marking his 25th film. Produced by Vijay Antony Films Corporation, presented in the name of Meera Vijay Antony, the film promises to captivate audiences with its powerful storytelling and performances.

Joining Kannan in this power-packed film is an ensemble cast featuring Vaagai Chandrasekar, Sunil Kriplani, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Riya Jithu, Shoba Viswanath and child actor Master Keshav, each bringing depth and versatility to the narrative. The film also boasts a stellar technical crew, including cinematographer Shelley Calist, music composer Vijay Antony, editor Raymond Derrick Crasta, and action choreographer Rajashekar.

With a gripping storyline, action-packed sequences, and emotionally charged moments, Shakthi Thirumagan is shaping up to be a must-watch. Currently in post-production, the team is working towards delivering a grand cinematic experience.

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் அறிமுக நாயகன் கண்ணனை ஞாபகம் இருக்கிறதா?

காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்க முடியாத நடிகராக அறியப்பட்டவர் மூத்த நடிகர் கண்ணன். இவர் ‘சக்தி திருமகன்’ படத்திற்காக அழுத்தமான கதாப்பாத்திரத்தின் மூலம் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார். பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன், சக்தி திருமகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது நடிப்பு மற்றும் அவரது கதாபாத்திரத்தின் படைப்பு குறித்த
ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அவரது comeback, இந்த உணர்ச்சிகரமான படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

மிகவும் புகழப்பட்ட படைப்புகளான அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இயக்கும் ‘சக்தி திருமகன்’ படம், குடும்ப உறவுகள், அதிரடி சண்டைகாட்சிகள் மற்றும் எமோஷனல் நிறைந்த ஒரு ஜன ரஞ்சக படமாக உருவாகிறது. இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும். மேலும் இது அவரது 25 வது படமாகும். மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படம், அதன் அழுத்தமான கதைசொல்லல் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

இந்த உணர்ச்சிப் பூர்வமான படத்தில் கண்ணனுடன் இணைந்து நடித்துள்ள வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் ஆகியோர் ஒவ்வொருவரும் அவர்களது சிறப்பான நடிப்பின் மூலம் கதைக்கு ஆழத்தையும், உயிர்ப்பு தன்மையையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்தா மற்றும் நடன இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட நட்சத்திர தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்தில் உள்ளனர்.

அழுத்தாமன கதை, அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் ஆழமான எமோஷனஸ் என ‘சக்தி திருமகன்’ படம் அனைவரும் பார்க்க கூடிய ஒன்றாக உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இந்த படத்தின் படக்குழுவினர், பார்வையாளர்களுக்கு பிரமாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here