தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற ‘ உயிர் பத்திக்காம..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் – பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here