The Valentine Look of ‘Peranbum Perungobamum’ featuring the musical score by Isaignani Ilaiyaraaja is out now.

With the film’s lead pair looking so authentic with respect to the regional aspect, the poster has garnered good response from the youngsters.
Filmmaker Sivaprakash, a student of Balu Mahendra’s ‘Cinema Pattarai’ is embarking on his directorial journey with this film that also marks the debut of Vijith Bachan, son of well-esteemed filmmaker Thankar Bachan in the lead role. Debut actress Shali Nivekas is playing the female lead role in this movie. Mime Gopi, Arul Doss, Logu, Subathra, Deepa, Sai Vinoth alongside others perform pivotal roles in this movie.

The technical crew includes J.P. Dinesh Kumar (Cinematography), Isaignani Ilaiyaraaja (Music), Ramar (Editing), Saravanan (Art) and Johnson (P.R.O)
The film revolving around the an ordinary man with good thoughts is produced by Kamatchi Jayakrishnan of E5 Entertainment.
Shedding lights on the film, director Sivaprakash says, “The narrative of the film is structured as a series of events occurring across three distinct phases in the protagonist’s life. In what manner does the protagonist confront the societal injustices imposed upon him? The screenplay is crafted with captivating sequences and intriguing plot.”
With the film’s shooting wrapped up, the postproduction work is happening in full swing now.Johnson PRO
E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.
‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகிறது.
இதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்.. இந்த போஸ்டர் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.
பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.
இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி,
அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜே.பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். பி.ஆர்.ஒ ஜான்சன்.
நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை E5 என்டர்டைன்மெண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
”கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- Johnson PRO