இன்று 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
நடிகை லதா பெருமிதம்.
1972 ஆம் ஆண்டு இதே நாளில் சத்யா ஸ்டுடியோவில் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க கட்சியை துவங்கினார் நடிகை லதா…
அ.தி.மு.க கட்சி ஆரம்பித்து 49 ஆண்டுகள் முடிந்து இன்று 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அதையொட்டி அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு நடிகை லதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக தொண்டர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் உறுப்பினர் ஓமப்பொடி சி.பிரசாத் சிங் மற்றும் கனரா வங்கி மௌபரேஸ் ரோடு கிளை மேலாளர் ஆர்.சரவணன் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது பற்றி நடிகை லதா பகிர்ந்து கொண்டவை..
1972 ஆம் ஆண்டு இதே சத்யா ஸ்டுடியோ வில் தான் எம்.ஜி.ஆர் ஆவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கினார் இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் அவர்களோடு நான் நடித்த முதல் படமான நேற்று இன்று நாளை படத்தின் படப்பிடிப்பு இதே சத்யா ஸ்டுடியோவில் தான் நடந்தது. அப்போதுதான் கட்சியை துவங்கினார்.
அதே சத்யா ஸ்டுடியோவில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு சிறப்பான
ஆட்சியை வழங்கினார்.
அ.தி.மு.க வளர்ச்சி நிதிக்காக மதுரை, திருச்சி, கோவை, தேனி, பவானி போன்ற ஊர்களில் எனது கலைநிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த ரூபாய் 35 லட்சத்தை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வழங்கியபோது ஒரு நடராஜர் சிலையை எனக்கு பரிசாக வழங்கியது இன்று என்னால் மறக்க முடியாதது.
அவர் ஆரம்பித்த கட்சி இன்னும் எவ்வளவோ புயல்கள் வந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.உலகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்று என் மேல் அன்பு வைத்து நட்புடன் இருக்கிறார்கள் அது எனக்கு கழகத்தின் மூத்த மூன்றாவது பெண் உறுப்பினரான பெருமையாக உள்ளது என்றார் நடிகை லதா.