
உங்கள் ஜெயா டிவியில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவையோ சுவை நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் பழனி அவர்கள் பலவித சுவையான உணவு வகைகளை புதுமையான முறையில் நேயர்களுக்கு சமைத்து வழங்குகிறார். . நேயர்கள் விரும்பி அனுப்பும் விதவிதமான பல்வேறு சமையல் குறிப்புகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனையும் சமைத்து காட்டுகிறார்.
இந்நிகழ்ச்சியின் இடையே தொகுப்பாளர் ஷீத்தல் சமையல் குறித்து கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார் சமையல் கலைஞர் பழனி.
சுவையான உணவு வகைகளை புதுமையான முறையில் வீட்டில் இருந்தபடியே சமைத்து சுவைத்திட சுவையோ சுவை நிகழ்ச்சியை உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு கண்டு களியுங்கள்.