ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை காலைமலர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ராசிபலன்,விருந்தினர் பக்கம், சிரிப்போம் சிந்திப்போம், தெரிந்ததும் தெரியாததும், மாத்தியோசி என பல பகுதிகள் இடம் பெறுகிறது. காலைமலர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ” கம கம சமையல் “ நாள்தோறும் ஒளிபரப்பாகிறது.நம் வீட்டு சமையலறையில் இருக்கும் எளிமையான சமையல் பொருட்களை வைத்து வித்தியாசமான, புதுமையான உணவு வகைகளை செப்.தீனா மற்றும் செப்.வித்யா அவர்கள் சமைத்து காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கின்றார்கள்.ஐந்து நிமிடத்தில் ஒரு அசத்தலான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது இந்த ’’ கம கம சமையல் ’’ பகுதி காணத்தவறாதீர்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கும் ” கம கம மாலை “ யாக உங்களுக்கு விருந்தளிக்கும் விதமாக காண்போருக்கு பரிமாறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here