One of the many jobs affected by korana issue tv series and shows
Product. Channels are paralyzed without broadcasting new series shows. Channels have faced the loss without advertising revenue. 750 people from Pepsi Union, who believed in vijay tv’s series and shows were unable to work throughout April. They are all daily income. For those 750 people
Vijay Tv has provided 75 lakh rupees as a scholarship to reduce the accept. This is not too much income if they had worked all over April, it would not too much. Vijay Tv has confirmed that the account of employees who work in every series through production companies and provided the total amount to product companies and that the money goes to every worker through them. I am the one who is preparing two tv series in vijay tv. Everyone who helped is thanking us on the phone thinking that we have given that money. Really that thanks should go to vijay tv. They didn’t even advertise what they did this help. This post is because thank you should always go to the right place. My heartfelt thanks to vijay tv for doing this great help with humanity. Your Vijay Tv is not just a word, but in a problem situation, vijay tv is standing by everyone’s heart as our vijay tv. Hearty thanks to Pradeep Milroy Peter for the general manager krishnan kutty and senior Vice President Balachandran, who is hidden behind this great help.

Ramanakirivasan
FICTION TEAM

கொரானா பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பணிகளில் ஒன்று தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள்
தயாரிப்பு. புதிய தொடர்கள் நிகழ்சிகளை ஒளிபரப்ப முடியாமல் சேனல்கள் முடங்கி இருக்கின்றன. விளம்பர வருவாய் இன்றி சேனல்கள் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றன. விஜய்டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த பெப்சி யூனியனின் பல துறையை சேர்ந்த 750 பேர் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய செய்ய இயலாமல் போனது.அவர்கள் அனைவருமே தினசரி வருமானக்காரர்கள். அந்த 750 பேருக்கும்
ஏற்க்குறைய 75 லட்சரூபாயை விஜய்டிவி உதவி தொகையாக வழங்கி இருக்கிறது. இது ஏறக்குறைய அவர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்து இருந்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதற்க்கு சமமான தொகை என்றால் அது மிகை இல்லை. தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்த தொகையை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்த பணம் போய் சேருகிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது. விஜய் டிவியில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து கொண்டிருப்பவன் நான். உதவி பெற்ற ஒவ்வொருவரும் அந்த பணத்தை நாங்கள் வழங்கியதாக எண்ணி தொலைபேசியில் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த நன்றி விஜய்டிவிக்கே போய் சேர வேண்டும். அவர்கள் இந்த உதவியை செய்ததை கூட விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. நன்றி எப்போதும் சரியான இடத்திற்க்கு போய் சேரவேண்டும் என்பதால் தான் இந்த பதிவு. மனிதநேயத்துடன் இந்த மாபெரும் உதவியை செய்த விஜய்டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் விஜய் டிவி என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் பிரச்சனையான சூழலில் நிஜமாகவே தொழிலாளர்கள் பக்கம் நின்று எங்கள் விஜய் டிவியாக அனைவரது இதயத்திலும் உயர்ந்து நிற்கிறது விஜய் டிவி. இந்த மாபெரும் உதவிக்கு பின்னால் மறைந்து இருக்கும் மனிதநேயம் மிக்க விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் சீனியர் வைஸ் பிரஸிடெண்ட் பாலசந்திரன் அவர்களுக்கும் தலைமை நிகழ்ச்சி பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ரமணகிரிவாசன்
FICTION TEAM


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here