இதன் தயாரிப்பாளர் RufusParker பேசுகையில்,

இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதை தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்பொழுது ஏதோ சொர்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை *சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற ஆங்கிலப்படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. வெவ்வேரு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்கி வைத்து அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்திகின்றனர் . பன்னிரண்டு மணி நேர வேலை ,அடி ,சவுக்கடி பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவர்களை வைத்து பாலியல் படங்கள் தயாரிப்பது மற்றும் பல்வேரு சட்ட விரோதங்கள் செயல்கள் நடைபெறுவதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படம் வெளிப்படுத்தி இருக்கிறது. . அமெரிக்காவில் நிகழும் இந்த வன்கொடுமையை உலகிற்கு வெளிப்படுத்த பல்லாண்டுகாலம் படத்தை எடுத்து வைத்து காத்திருந்தேன். பல போராட்டத்திற்கு பிறகு இந்த படம் அமெரிக்காவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகின் சொர்க பூமி என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது என்று அங்குள்ள பிரபல ஹீரோக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த படம் தற்போது இந்தியாவில் அதாவது உலக நாடுகள் முழுவதும் வெளியிடப்பட உள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here