கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிறு பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள். இந்த உணவகம் தொடங்கி இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு உணவு வழங்கும் இந்த சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here