
உலக அரங்கில் சிம்பொனி இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களை பூத மங்கலம் போஸ்ட் படத்தை தயாரித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களான சி சி வி குரூப் நிறுவனத்தை சார்ந்த டாக்டர் பொன் கோ சந்திரபோஸ் இந்திய மருத்துவ சங்க சென்னை மண்டல தலைவர் மருத்துவர் பொன் கோ சந்திரசேகர் வழக்கறிஞர் பொன் கோ விஜயன் ஆகிய மூன்று சகோதரர்களும் இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நினைவு பரிசாக தஞ்சை பெரிய கோவில் கோபுர சிலையும் இசைஞானி இளையராஜா அவர்களின் தாயாரான சின்னத்தாய் அம்மாள் அவர்களுடன் இணைந்த புகைப்படத்தை கொடுத்தனர். அந்த புகைப்படத்தை கண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் மனம் நெகிழ்ந்தார்.
