ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”.
இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குனர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார். கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்!
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”
கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.