பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் (Flying Elephants Entertainment) சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு – க. பி’ (கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின்).

டாணாக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். சரண்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த டிஎஸ்கே(TSK) இந்த படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை புகழ் பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை ஜி எம் சுந்தர் கவனித்துள்ளார். இவர் மகாராஜா, லப்பர் பந்து ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமனின் சிஷ்யர். இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பணியாற்றிய தர்ஷன் ரவிக்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷமந்த் நாக் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.பாலு மகேந்திராவின் மாணவரான சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தை வி & டோனி இன்டர்நேஷனல் மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டைன்மென்ட் சார்பில் லால் தேவசகாயம் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் உலகமெங்கும் வெளியிடுகிறார்கள்.
Hero Vignesh Ravi – Anbu
Saranya Ravichandran – Anu
Tsk – Arivu
Priyadharshini – Ammu
Writer& Director – Pushpanathan Arumugam
Produced by – Pushpanathan Arumugam & V International
Cast – Vignesh Ravi, TSK, Saranya Ravichandran, Priya Dharshini
Cinematography – GM Sundar
Edit – Sivaraj Parameswaran
Music – Dharshan Ravi Kumar
Art director – Karthick
Asst. Directors – Indira kumar, Karthik Seenivasan, Vijay, Vetri Vendhan
Asst. Cinematographer – Pon Isakki Sundar, A Gokul Raj, Harish, Silambarasan
Makeup- Seldon George
Stills – Ezhumalai G
Title design – Vijay VXM
DI- Praveen Thandapani
PRO – KSK Selva
Sound design – Iqbal CM – Guna
Vfx – Tamizh Sudar
Costume Designs – Manju
Production Manager – P. Prakash
Publicity designer – Selvaa
Audio label – S Music India