Actors Arya & Makkal Selvan Vijay Sethupathi unveil G.V. Prakash Kumar’s second single ‘Kaana Vilakku Mayile’ from Idi Muzhakkam 

Content-driven star G.V. Prakash Kumar has been consistently hitting headlines for his successful avatars as a music director and actor. His ability to choose unique scripts and deliver naturalistic performances makes him the favourite of industry and audiences. The actor’s upcoming collaboration with iconic filmmaker Seenu Ramasamy for ‘Idi Muzhakkam’ has kept the excitement at peak among film enthusiasts. The film is produced by Skyman Films International Kalaimagan Mubarak. 

The makers have now unveiled the film’s second single titled ‘Kaana Vilakku Mayile’, an energetic folk number crooned by Antony Dasan, written by Vairamuthu and composed by N.R. Raghunanthan. 

The leading actors of the film industry, Arya and Makkal Selvan Vijay Sethupathi, launched the song, and the entire team has extended its heartiest thanks for their kind gesture. 

Idi Muzhakkam is an out-and-out Southern district revenge, action Thriller. The film features G.V. Prakash Kumar as a meat shop owner, and Gayathrie Shankar as a nurse. Saranya Ponvannan, Aruldoss, Soundaraja and many others are a part of this ensemble star-cast. Famous writer Jayamohan has penned the dialogues. Apart from directing, Seenu Ramasamy has penned story and screenplay for this film.

Idi Muzhakkam is produced by Kalaimagan Mubarak of Skyman Films International and is scheduled for May release.

நடிகர் ஜிவி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது!

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

தற்போது படத்தில் இருந்து எனர்ஜிடிக்கான இரண்டாவது பாடலான ‘கானா விளக்கு மயிலே’ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டனர். படக்குழு இருவரின் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

’இடிமுழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல், சீனு ராமசாமி இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

’இடிமுழக்கம்’ படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படம் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here