திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்பிற்குரிய சகோதரர் எஸ்.எஸ்.ஸ்டான்லி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட வெற்றிப்படைப்புகள் பல தந்ததோடு, தம்முடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களின் மனங்களை வென்ற சகோதரர் ஸ்டான்லி அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
சகோதரர் ஸ்டான்லி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் ஸ்டான்லி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!