Chennai, May 1, 2025 – The official promo of Heartbeat Season 2 has dropped on JioHotstar, offering a compelling curtain-raiser to one of the most anticipated sequels in Tamil streaming. Ever since Season 1 ended on a cliffhanger, fans have been eagerly waiting for answers — and expectations for this new season are sky-high. With its emotional depth, strong characters, and authentic portrayal of hospital life, Heartbeat carved a loyal fanbase, and Season 2 promises to deliver bigger moments, deeper conflicts, and heartfelt storytelling.
The promo reintroduces viewers to Rina – or Rina 2.0 – now a senior doctor at RK Hospital. More assured, composed, and in control, Rina is seen leading her new batch of interns with empathy and quiet strength. But beyond her professional role, the promo also shows her playful camaraderie with her old friends, adding warmth and fun to the emotionally intense world of RK Hospital. Her complex relationship with Arjun — now the Chairman — simmers with unresolved tension, and at the emotional core of the story is Rina’s longing for her mother, Dr. Rathi. The long-hidden secret about their relationship is now out in the open, setting the stage for high-stakes emotional drama.
Season 2 also introduces a fresh group of interns — Nilofer (played by Kana Kaanum Kaalangal fame Akshata), Kiran (Shivam), and Kamal (Abdool), Roshini (Amaya) along with TM Karthik stepping in as the new chief doctor. They join returning cast members Deepa Balu as Rina, Anumol as Dr. Rathi, Yoga Lakshmi as Theju, Padine Kumar as Anita, Sarvhaa as Guna, Sabareesh as Rocky, Charukesh as Arjun, Ram as Naveen, Chandrasekar as Dev, and Giri Dwarakesh as Ramanadhan, along with Diyansh, Reya— all reprising their roles with new arcs and deeper conflicts.
Heartbeat Season 2 is written and directed by Deepak Sundararajan, with cinematography by Regimal Surya Thomas, editing by Vignesh Arjun, and music by Saran Raghavan. The series is produced by A Telefactory Productions Rajavelu, with Rj Shyam Sundar joining as Executive Producer. The series is expected to premiere soon, exclusively on JioHotstar. With the curtain now lifted, fans can expect a season packed with emotion, energy, and answers to every question they’ve held onto since Season 1.

About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் ‘ஹார்ட் பீட்’டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.

ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது விடை கிடைக்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இது உணர்ச்சிகரமான தருணங்களாக அமையும்.

கதையின் சீசன் 2 புதிய பயிற்சியாளர் குழுவையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹார்ட் பீட் சீசன் 2’-வை தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தத் தொடர் விரைவில் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக இருக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here