
துப்பறிவாளராக நட்ராஜ், மருத்துவராக கே.பாக்யராஜ் நடிக்கின்றனர்

ஆறு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்து விடுகிறான். அது இயற்கை மரணமா ? என்று விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் ராவணன் வருகிறார். மகன் இறந்த விரக்தியில் மனநிலை பாதிக்கப்படுகிறார் தந்தை . மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் கிரிஷ் என்பவர் வருகிறார். இது தவிர வானிலிருந்து பூமியை நோக்கி ஒரு விண்கல் வருகிறது .இதை விஞ்ஞானிகளும் எதிர் நோக்குகிறார்கள் . தென்னிந்தியாவில் கேரள பகுதியை நோக்கி இவ்விண்கல் விழுகிறது. இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இறந்து போன சிறுவனை பற்றி விசாரிக்கப்பட்டதா? இந்த விஞ்ஞான மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா ? என்பதை விளக்கி அறிவியல் சார்ந்த படமாக ” எக்ஸ் எக்ஸ் எக்ஸ்” (xxx) உருவாகி வருகிறது.

சினிமா பிளாட்பார்ம் பட நிறுவனம் சார்பில் ரித்திஷ் குமார் தயாரித்து இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடராஜ் நடிக்க டாக்டராக கே.பாக்யராஜ் நடிக்கிறார். மேலும் சிங்கம்புலி, டீனா, ஆர்த்தி ஷாலினி, மாஸ்டர் இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு -செல்வா .ஆர்
இசை -பிரேம்ஜி அமரன்
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் –
வி. டி.ரித்தீஷ் குமார்
இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கேரளா மற்றும் ஊட்டியில் ஒரே கட்ட படபிடிப்பாக இடைவிடாது நடைபெற்று வருகிறது.