தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன . காலம் ,கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.
காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கணவனை விட  வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.
26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் ‘ஊர்வசி’  வெப் சீரிஸ் .
வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது. நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.
சென்னையில் ஒரே அறையில்  தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர் தான் கதாநாயகன். வாடகை டாக்சி ஓட்டும் ஒருவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில் பயணியாக வரும் ஒருத்திக்கும் இடையே பரஸ்பரம் புரிதலும் அன்பும் காதலும் ஏற்படும் சூழல் வருகிறது.இருவருக்குள்ளும் பூசல்கள் முரண்பாடுகள், ஏன் சண்டைகள் வரை செல்கிறது. பிரிவும் நேர்கிறது. அதன்பிறகு ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்து இணைகிறார்கள் என்பதைப்பற்றி சொல்லும் கதை இது.


இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ் .கே.எஸ். கார்த்திக் கண்ணன்.  இவர் ஏற்கெனவே ‘திடல் ‘  படத்தை இயக்கியவர். ஏராளமான குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்.இவரது ‘ நிறம்’ என்ற குறும்படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்றது.
ஊர்வசி இணைய தொடரில் நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார். அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள் .கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள்  நேத்ரா, ஜெஸிகா நடிக்கிறார்கள்.
கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது .இதே போல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது.
காலமாற்றத்தில் காதலின் போக்கைச் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகிறது. இதை ஆர்ஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது.  ஒளிப்பதிவு சேகர் ராம் ஜெரால்டு, இசை பாடல்கள் ஸ்ரீ சாய் தேவ், எடிட்டிங் -ரோஜர், சண்டைக்காட்சிகள் – ஓம் பிரகாஷ் -கலை இயக்கம் சிவா என தொழில்நுட்ப கூட்டணி அமைத்து இத்தொடரை உருவாக்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here