
வழக்கம்போல் தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் உணவளித்தும், நண்பர்களோடு மகிழ்ந்தும் கொண்டாடுகிறார் அப்புக்குட்டி.
‘அழகர்சாமியின் குதிரை’ ஏறி, தனது நடிப்பு திறமையால் டெல்லி சென்று, தேசிய விருது வாங்கிய நடிகர் அப்புக்குட்டி. தொடர்ந்து பல படங்கள் நடித்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ இவ்விரு படங்களும் வெளிவர உள்ளது.
கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்கள், காமெடி என ‘ஐ அம் வெயிட்டிங்”, ‘அரி கொம்பன்’, ‘நா கன்னியப்பன்’, ‘பிரம்ம முகூர்த்தம்’ ‘பயமறியான்’, ‘சாயா வனம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.