மதுரை: மதுரையில் எம்ஆர் புரமோட்டர்ஸ் சார்பில் ‘வாராரு வாராரு…கள்ளழகர் வாராரு… எனும் கள்ளழகரை போற்றும் பக்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மே 10-ம் தேதி அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.

கள்ளழகரை வரவேற்க பக்தி மணம் கமழும் பாடல் எம்ஆர் பரமோட்டர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

மண்ணதிர…விண்ணதிர வாராரு… வாராரு…கள்ளழகர் வாராரு என்ற கள்ளழகரை போற்றும் பக்தி பாடலுக்கு இளையவன் இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார்.

இந்த பாடல் வெளியீடு காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் (ஐஎன்டியுசி) குமார், எம்ஆர் புரொமொட்டர்ஸ் நிர்வாக இயக்குநர்கள் ஏ.மணிகண்டன், ரம்யா மணிகண்டன், இயக்குநர் வள்ளி மணிகண்டன், புதுயுகம் டிவி எம்.எஸ்.பரணி, உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் ராகவேந்திரன், மாவட்ட நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் என்.சிவமுருகன், மதுரை தொழிலதிபர் விஆர்ஜி.பழனி ,தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பாடல் வெளியிட்டில் நியூஸ் பார்ட்னராக இந்து தமிழ் திசை, மீடியா பார்ட்னராக புதுயுகம், ரேடியோ பார்ட்னராக ரேடியோசிட்டி, மியூசிக் பார்ட்னராக சரிகம ஆகியவை உள்ளன.

இந்த பாடலை இன்று முதல் சரிகமா youtube சேனலில் காணலாம்.பாடல் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here