
மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.

ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர்.

திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:

உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.

அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.

இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.