Directed by Sathyasiva, the film “Freedom,” featuring Sasikumar in the lead role, is set for a global theatrical release on July 10
Produced by Pandian Parasuraman under the Vijaya Ganapathy Pictures banner, the film stars Sasikumar and Lijomol Jose of Jai Bhim fame, and is helmed by acclaimed director Sathyasiva, known for the critically acclaimed film Kazhugu. The official poster announcing the release date was unveiled by the film team.
Director Sathyasiva, who made a mark with Kazhugu, has crafted “Freedom” as a gripping thriller drama based on a real-life incident from the 1990s.
After the success of his Tourist Family Blockbuster, Sasikumar returns with yet another distinct film set against the backdrop of Eelam. The pairing of Sasikumar and Lijomol Jose, reminiscent of classic on-screen duos like Sasikumar and Simran, is expected to captivate audiences with their strong onscreen chemistry.
Known for choosing unique subjects and delivering consistent hits, Sasikumar is expected to once again charm audiences with a heartwarming and engaging film.
Since the film is set in the 1990s, the team has worked diligently to recreate the era authentically. A grand set replicating the East Coast Road of that period was constructed at great expense to shoot key scenes. The entire filming took place across Chennai and Kerala and is now complete.
Sasikumar plays the lead in a unique role, while Lijomol Jose, who caught attention in Jai Bhim, plays the female lead. Bollywood actor Sudev Nair takes on the role of the antagonist. The cast also includes Malavika (of KGF fame), Boss Venkat, M. Ramasamy, and Ramesh Khanna in pivotal roles.
Having served as an executive producer on many major Tamil films, Pandian Parasuraman now makes his debut as a full-fledged producer with this grand-scale project under the Vijaya Ganapathy Pictures banner.
Announcements regarding the teaser and trailer of Freedom will be made soon. The film is all set for a worldwide theatrical release on July 10.
Technical Crew:
Production House: Vijaya Ganapathy Pictures
Producer: Pandian Parasuraman
Director: Sathyasiva
Music: Ghibran
Cinematography: N.S. Udhayakumar
Editor: Srikanth N.B.
Art Direction: C. Udhayakumar
PRO: Sathish (AIM)
சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், “ப்ரீடம்” படம் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் “ப்ரீடம்” படம் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமரார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள “ப்ரீடம்” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது, இதன் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் அதே போன்ற மாறுபட்ட ஈழ பின்னணி களத்தில், இப்படத்தில் அசத்தவுள்ளார். சசிக்குமார், சிம்ரன் ஜோடி போலவே, இப்படத்தில் சசிகுமார் மற்றும் ஜெய்பீம் புகழ் லிஜோ மோல் ஜோஷ் ஜோடி ரசிகர்களை ஈர்ர்கும். அவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக அமைந்துள்ளது.
வித்தியாசமான களங்களில் தொடர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் சசிக்குமாருக்கு மீண்டும் மக்கள் மனம் கவரும் ஒரு இனிமையான வெற்றிப்படமாக இப்படம் இருக்கும்.
90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேர்வு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – விஜய கணபதி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராமன்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB
கலை இயக்கம் – C உதயகுமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)