L.G. Movies சார்பில் S.LATHHA தயாரிக்கும் படம் “ மரகதமலை .

தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிக்கும் படங்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த ஏக்கக்தை போக்கும் வகையில் இப்படம் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு பெண் டைரக்டர்
கரடி,புலி மற்ற மிருகங்களுடன் அசத்தலாக அறிமுகமாகிறார். பெண் டைரக்டர்கள் சுதா கோங்குரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஹலிதா சமீம், கிருத்திகா உதயநிதி வரிசையில் பெண் டைரக்டராக எஸ்.லதா.

இப்படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்குநராக எஸ்.லதா ( S.LATHHA ) அறிமுகமாகிரார்.
டைரக்டரான அனுபவத்தை அவர் கூறும் போது..

ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு வளர்ந்தேன். கேட்ட கதையோடு என் கற்பனையும் சேர்த்து என் குழந்தைகள் உட்பட யாரை பார்த்தாலும் கதை சொல்லி அசத்துவது என் வழக்கம். அது கால போக்கில் படம் எடுக்கும் ஆசையெய் தூண்டியது. படம் எடுப்பதற்காக நிறைய கதைகள் கேட்டேன். நான் கதைகள் கேட்டு வருவதை பார்த்து, என்னம்மா, நீங்களே நல்ல கதை சொல்றீங்க.. நீங்களே உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதை ஏன் எழுத கூடதுன்னனு என் பிள்ளைங்க கேட்டாங்க.. அப்படி உருவானது தான் இந்த “மரதகமலை”. நல்ல டெக்னீசியன்களை வைத்து ஆரம்பித்து முடித்து விட்டேன்..” என்றார் டைரக்டர் எஸ்.லதா.

குழந்தைகளை கவரும் வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புலி, யானை, டிராகன், கொரில்லா, பாம்பு, குதிரை என படம் அட்டகாசமாக புதுமையான ஃபேண்டஸி டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கான VFX வேலைகள் இரவு பகலெனும் பாராமல் நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில், இந்த கோடையில் குடும்பங்கள் குழந்தைகளோடு கொண்டாடும் வகையில், மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப் படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, நடிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிக்ஹா மற்றும் முதன்மை கதா பாத்திரத்தில் தம்பி
ராமையா, ஜெகன், சம்பத் ராம், வில்லானாக டெம்பர் வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

18 ஆம் நூற்றாண்டில் நடந்த கதையாக Period படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு “ தடா ” காட்டுப்பகுதியில் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது.

இசையமைப்பாளர் – L. V. முத்து கணேஷ்
ஒளிப்பதிவு- P.G. முத்தையா,
எடிட்டர் – பிஜூ வி டான் போஸ்கோ
கலை – P. சண்முகம் B.F.A,
P.R.O – ஜான்சன்,
தயாரிப்பு மேற்பார்வை – K. தண்டபாணி மற்றும்
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கோடைகால விடுமுறையில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் அனைவரையும் குஷி படுத்த உள்ளது . படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here