‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்”

ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்..

இத்திரைப்படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில், இயக்குநர்கள் சேரன், சுந்தர்.சி, சீனு ராமசாமி, எச்.வினோத், சசிகுமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டனர்.

தென்காசி, குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் ஆதம் பாவா கூறும்போது, “இதற்கு முன்பு என் தயாரிப்பில் ஆன்டி இண்டியன் மற்றும் உயிர் தமிழுக்கு ஆகிய இரு படங்களும் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த தர்மயுத்தம் திரைப்படத்தில் அரசியல் கட்சித்தலைவரான சீமான் நடித்திருந்தாலும், இது துளி கூட அரசியல் இல்லாத படம் என்பது தான் ஹைலைட் !

சீமான் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

தற்போது மலையாளத்தில் மட்டுமே கதையம்சமுள்ள தரமான விறுவிறுப்பான வித்தியாசமான படங்கள் வருகிறது என்று விமர்சகர்களும் ரசிகர்களும் கூறுகிறார்கள் அல்லவா..?

தமிழிலும் அதற்கு சளைக்காத திரைக்கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் விதமாக இந்த படம் ஒரு விறுவிறுப்பான எமோஷனல் இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லராக அமைந்துள்ளது

இப்படத்திற்குப் பிறகு இயக்குநர் இரா,சுப்ரமணியன் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வருவார்.

மேலும் இது ஆரோக்கியமான மாற்று தமிழ் சினிமாக்களின் துவக்கமாக இருக்குமென நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கூறியுள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ; மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார்

இயக்கம் ; இரா.சுப்ரமணியன்

ஒளிப்பதிவு ; செழியன்

இசை ; விஷால் சந்திரசேகர்

பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து

படத்தொகுப்பு ; புவன் சீனிவாசன்

கலை இயக்குநர ; மாயப்பாண்டி

தயாரிப்பு நிர்வாகி ; முத்.அம்.சிவக்குமார்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here