தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் 14.5.2025 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ் புரொடக்ஷன் வேலைகளை நிறுத்தம் செய்து பணிக்கு செல்லும் ஒவ்வொரு தொழிலாளரையும் பணி செய்ய விடாமல் அவர்களது வருமானத்தினை கெடுத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பினை சம்பந்தப்பட்ட பெப்சி உறுப்பினர் மற்றும் அவர் சார்ந்திருக்கும் சங்க நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அந்த பொருளாதார இழப்பினை சட்ட ரீதியாக திரும்ப பெற்றுத்ர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அவர்கள் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது என்று அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து உண்மையிலேயே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை சீர்குலைப்பதே திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நிறுத்தவில்லை அவர்கள் தொடர்ந்து நடத்தி தான் வருகிறார்கள். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் மட்டுமே படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்தி நிறுத்தம் செய்கிறார்கள்.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு படப்பிடிப்பு அல்லது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தவில்லை. ஆகவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது திரைப்பட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 14/5/2025 அன்று பெப்சி உறுப்பினர்கள் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு வரவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் தங்களது விருப்பம் போல் பணிக்கு வரும் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு பணிகளை நடத்திக் கொள்ளலாம். அதனை மீறி யாரேனும் ஏதேனும் இடையூறு செய்தால் உடனடியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here