
மதுரை,
சமூக ஆர்வலரும், நடிகருமான விஜய்விஷ்வா அவர்களின் விவி என்டர்டைன்மெண்ட் மற்றும் மாமதுரையர்கள் எம் ஆர் பிரமோட்டர்ஸ் & STAR trust T குருசாமி உடன் இணைந்து நம்ம ஊரு வைப்ஸ் சிறப்பு சித்திரை ஆடை அலங்கார்ர திருவிழாவை நடத்தியது.

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பணசாமி, முருகன் போன்ற சாமி வேடமணிந்து கலந்து கொண்டது காண்போரை நெகிழச் செய்தது. இந்த கோலாகல விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் திரு.ஜே.கே.முத்து,, தபோவன் திரு.தீனதயாளன், சமுத்ரா செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் முத்தாய்ப்பாக குழந்தைகளின் கண்கவர் பாட்டு போட்டி மற்றும் நடனம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமதுரையர் அமைப்பின் அகில.உலக தலைவர் க.திருமுருகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது விவி என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் 400 நாட்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேர் அன்னதானம் வழங்கும் திரு ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் குருசாமி அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது

இதனோடு இணைந்து முக்கிய நிகழ்வாக எம்.ஆர் புரோமோட்டர்ஸ் நிறுவனத் தலைவர் நெல்லை சிங்கம் திரு மணிகண்டன் உருவாக்கிய கள்ளழகர் சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது.

அதோடு போட்டியில் பங்கேற்ற குழந்தைகளில் ஒருவரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து வீட்டுமனையை பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதோடு 2 குழந்தைகளுக்கு 50% சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை கிராண்ட் புக் ஆஃப் யூனிவர்ஸ் ரெக்கார்ட் உலக சாதனையாக அங்கீகரித்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமதுரையர் அமைப்பு மற்றும்.
விவி எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனர் விஜய்விஷ்வா மற்றும் vv entertainments நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.