‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.

புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர், லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், காடுகளிலும், முள்ளுக்காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

இசை சாந்தன் அன்பழகன்,
சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு, மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.

படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தைப்பற்றி
இயக்குனர் கூறுகையில், “இதுவரை தமிழ் சினிமாவில் வந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களில், பெண் கதாபாத்திரங்களின்றி எந்தப் படமாவது வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி பெண்களின்றி எந்தப் படமும் இதுவரை வரவில்லையென்றால், இந்தப்படம்தான், பெண் கதாபாத்திரங்களே இடம்பெறாத முதல் தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே இல்லாததுபோல், கதையை அமைக்கவில்லை. கதைக்கு அவர்கள் தேவைப்படவில்லை. அவ்வளவுதான். ஆனால், பெண் கதாபாத்திரங்கள் ஏதும் இல்லையே என பார்வையாளர்களுக்கு தோன்றாத வண்ணம், காட்சிக்கு காட்சி கதை வேகமாக சென்று கொண்டிருக்கும். படம் முடிந்த பிறகுதான் பார்வையாளர்களுக்கு, படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாதது ஞாபகம் வரும். மேலும், இதுவரை சொல்லப்படாத கதைகளத்தில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். படம் பாருங்கள். கன்டிப்பாக நீங்களே இதனை உணர்வீர்கள். மே மாதம் திரைக்கு வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here