Producer Kalaimagan Mubarak of Skyman Films International has lined up many projects that are scheduled at different stages of production. The first to hit the screens among them is Mugen starrer “Velan” directed by Kavin. The film features Soori in a prominent role and Meenakshi Govindarajan plays the female lead. Prabhu, Hareesh Peraadi, Brigida and other familiar actors are a part of the star-cast. While the film is scheduled for worldwide release on December 31, 2021, the audio launch of this film was held this morning in Jains Women College in a famous women’s college in Chennai.

Here are the excerpts of this event

Producer Kalaimagan Mubarak kept his speech short, sweet and simple citing, “This is the first time, I am experiencing such an event in my production career. I thank everyone here on the behalf of Skyman Films International. We have tried out best in making a good film, and I request you all to encourage us by watching the film in the theaters and appreciate us.”

Actor Prankster Rahul said, “I am so glad to be sharing the stage with eminent personalities of the film industry. It was an amazing experience to work with the entire team. Soori Anna was such a humble and good-hearted person. He will spark off laughter in me, every time, I see him on the sets. His sense of humour is unbeatable and you can’t resist the laughter. Prabhu sir is such a great human, and he takes care of everyone with so much hospitality. He would even help us in the betterment of acting. I thank director Kavin for making me a part of this film. Myself and Mugen have become close friends now. I have never seen him spending his leisure time inside the caravan. He loves to interact with the cast and crew of this film all the time. Mugen has pranked me in the real life. Brigida has given a cute performance. Velan will be a delightful treat for everyone and I request you all to make this film, a great success.”

Actress Meenakshi Govindarajan said, “I came to this college before 3 years seeking admission, but couldn’t make it here. However, I am glad to see that I spending this moment here with you all. Working in this film, was a memorable experience for me. Many times, we would go for retakes due to laughter. After interacting with Mugen for the first time, I completely realized why everyone loves him. He is such a Gentleman and good-hearted person. His fans shower unconditional love on him. I am sure this film will be a good entertainment for all in the theaters.”

Actress Brigida said, “After seeing the college students elated and excited, I feel like I am missing my college days. This film is so close to my heart. This project has endowed me with a turning point after the terrible pandemic phase. This film will be a delightful experience to all. I will be a part of many projects, and I am looking forward to your love and support.”

Actress Soori said, “While working in Annatthe, when the director says ‘Shot is Ready’, Rajinikanth sir would have been 35 steps ahead of everyone. God has blessed him with such a great energy. I am delighted to see the same energy and vibes here in this college. The principal is loaded with so much energy. It’s not an easy task to become successful in the movie industry, but Mubarak sir has faced so many challenges and has become a great icon in the industry. His next production starring GV Prakash in the lead character is getting ready for release. He is distributing Ajith Kumar sir’s Valimai. His Midas-Touch is adding success to all the projects. My brother like Kavin worked as assistant to Siruthai Siva sir. He is a hardworking and talented filmmaker. I wish him all the best to succeed like his mentor. If there are 500 people, Mugen easily wins 100% applause and whistle easily. Working with Mugen, almost gave a vibe of sharing the screen with Sivakarthikeyan. He has a great future ahead and has the blessings of God. I have already worked with Meenakshi in the movie Kennedy Club. She has delivered a commendable performance in this film. There was a huge fan base for Brigida on the shooting spot. Rahul has done a great job in this movie. I was spellbound and couldn’t control my laughter after watching his prank in a car showroom. His talent of not getting slammed anywhere needs special mention. In spite of being a senior and experienced star, Prabhu sir treats everyone so kindly on the sets. He takes care of everyone on the sets with so much love. I pray to God that the film becomes a good hit.”

Actor Prabhu said, “I thank the faculty and board members of this college for allowing this event to happen here. Mugen has done a great job in this movie. Kavin is a wonderful filmmaker and I am so happy to work with a gentleman like producer Kalaimagan Mubarak sir. Rahul is doing a great job over online platform. I am happy to have worked with Meenakshi. Soori is a hardworking person, and has done a great work in this movie. Bigg Boss Mugen is such a good boy. Just like how, he was genuine and honest in the show, he has exerted same efforts for this film. This film will be a good breakthrough for him. The songs have come out very well. Both the action and comedy sequences have shaped up excellently. I thank Jain College for such a wonderful welcome and reception for our audio release here.”

Actor Mugen said, “This is the first time, I am witnessing such a great stage in my entire life. I thank Kavin Anna and Mubarak sir for giving such an opportunity. I was no different from the aspiring artiste, who yearned for an offer, and I am so thankful to these people for giving me a chance in this movie. When Kavin brother narrated the script, I was completely engaged and thoroughly enjoyed it. I request Mubarak sir to keep introducing many young talents in the industry. Prabhu sir is such a legend, but he treated me as his own son. He took so much care about me and kept suggesting me lots of acting tips… I am a great fan of Soori Anna, and I want to see him scale greater heights. I gelled with Rahul instantly I saw him. He has faced so many challenges, before experiencing success. I pray that he keeps experiencing more success in his life. Thambi Ramaiah sir has done a good role in this film. The entire crew worked as a family together. Meenakshi is a dedicated artiste and does every single shot with so much involvement. Brigida has done a good performance in this movie. I thank everyone here and because of your love, I am here. Velan is an important film in my career. This film will be loved by everyone in your family, and I request you all to support us.”

Director Kavin said, “Jain College students have made this occasion, look like a carnival. I thank Prabhu sir for being a part of this project. I still remember the moment in 2019, when the postproduction work of Viswasam was on full swing. I saw him giving Rs. 200 to everyone. I was standing across the corner. He spotted me and gave the money saying that it’s going to be a big start for me. It all started there, and instantly I got an opportunity to get-go with my directorial debut. I met Mugen and narrated the script, which he liked. I felt that he would befittingly look perfect for the role of Pollachi native boy. He thoroughly enjoyed working in this film. Initially, he was doubtful and asked me whether he would do justice to this role. I strongly believed in him and signed him for the project. Later, I narrated the script to Mubarak sir. Many suggested him not to invest so much big money into a project with newcomer in the lead role. But he strongly believed that the script demands the production value and agreed to produce it without any compromises. I owe a lot to Mubarak sir for trusting me and my script. When I approached Soori Anna for this project, he was simultaneously shooting for Rajinikanth’s Annatthe and Vetrimaaran sir film. He was quite busy, but still he agreed to be a part of this film. Till now, he has been involving himself into this project like my own brother. Thambi Ramaiah sir has combination scenes with everyone in the star-cast, and he has exhibited a fabulous performance. Meenakshi has delivered a commendable performance. Prankster Rahul kept giving lots of inputs that gave finest touch to the scenes. I thank all the technicians for being a great support in nurturing this project. Gopi Jagadeeswaran cinematography is going to be an additional attraction in this film. I thank everyone for making this event a great success and I am sure that you’ll enjoy the movie in the theaters.”

While Mugen, Soori and Meenakshi Govindarajan will be seen in the lead roles, the other actors are Prabhu, Maria Vincent, Prankster Rahul, Thambi Ramaiah, Hareesh Peradi, Brigida and many others. Gopi Sundar, the reigning music director of Malayalam industry has composed music and Gopi Jagadeeswaran has handled cinematography. Balasubramaniam is the art director. K. Sarathkumar is the editor. The other technicians are Mahesh Mathew (Stunt), Dinesh-Viji Sathish-Radhika (Choreography), Uma Devi-Vel Murugan-Kalaimagan Mubarak (Lyrics).

Produced by Kalaimagan Mubarak of Skyman Films International, the film written and directed by Kavin is all set for the worldwide theatrical release on December 31, 2021.

வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று தனியார் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரிப்பேராசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவினில்

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசியதாவது…
இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது…
உங்களை போல் தான் நானும், இணையத்தில் இருந்துவிட்டு, இவர்களோடு மேடையில் அமர்ந்திருப்பது பெருமை, சூரி அண்ணனை படப்பிடிப்பில் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது அவ்வளவு காமெடி செய்வார். பிரபு சார் கூட இருப்பவரை அத்தனை நல்ல முறையில் பார்த்து கொள்வார். ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கவினுக்கு நன்றி. முகேனும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் கேரவனில் இருக்க மாட்டார், எப்போதும் தொழிலாளர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். முகேன் என்னை ரியல் லைஃபில் ப்ராங்க் பண்ணிருக்கார். பிரிஜிடா சுட்டிப்பெண்ணாக நடித்திருக்கிறார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்த வேலன் படத்தை நீங்கள் ஹிட்டாக்க வேண்டும் நன்றி.

நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன் பேசியதாவது…
இந்த காலேஜில் மூணு வருஷம் முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது பிரபலமாக வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், உங்களுக்கும் பிடிக்கும். முகேனை நான் பார்க்க வேண்டும், படத்தின் கதை கேளு, என என் அம்மா சொன்னார்கள். முகேனிடம் பழகிய பிறகு தான் இவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பது தெரிந்தது, மிக நல்ல மனிதர். அவருடைய ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி

நாயகி பிரிகிடா பேசியதாவது…
இங்கு உங்கள் வரவேற்பை பார்க்கும் போது என் கல்லூரி நாட்களை நான் மிஸ் செய்கிறேன். இந்தப்படத்தை பொறுத்தவரை அனைவருமே மிகுந்த ஆதரவு தந்தார்கள் இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம், கோவிடுக்கு பிறகு எனக்கு திருப்பம் தந்த படம் இது. இந்தப்படம் உங்க அனைவருக்கும் பிடிக்கும், நான் தொடர்ந்து சினிமாவில் இருப்பேன். இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…
அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்த கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார். சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது. மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

நடிகர் பிரபு பேசியதாவது…
இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் பேசியதாவது…
இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார். இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர்,
சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது. வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். நன்றி.

இயக்குநர் கவின் பேசியதாவது…
ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார். நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி. சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும் நன்றி

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here