• வரும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 7.00 மணிக்கும் தொலைக்காட்சியில் இந்த மாபெரும் நடன யுத்தத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள்

• நடுவர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருடன் சிறப்பு விருந்தினராக இணைகிறார் பிரபல நடன இயக்குனர் கலா

சென்னை, 7 ஜனவரி 2022: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வார இறுதி நாட்களில் டான்ஸ் VS டான்ஸ் 2 நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூட நடனத்திறமை கொண்ட 6 குழுக்களுக்கிடையே நிகழும் மாபெரும் நடனப்போட்டியைக் காண தயாராகுங்கள். பிரபல திரைப்பட நடிகை குஷ்பு மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் நடுவர்களாக பங்கேற்க, ஒரு சிறப்பு விருந்தினராக டான்ஸ் குருவான பிரபல நடன இயக்குனர் கலா அவர்களோடு இணைகிறார். 2022 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் சனி இரவு 8.30 மணிக்கும், ஞாயிறு இரவு 7.00 மணிக்கும் ஆரம்பமாகும் வியப்பில் வாய்பிளக்கச் செய்யும் இந்த அற்புதமான நடனப்போட்டியை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கலர்ஸ் தமிழின் முதன்மயான டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் VS டான்ஸ் 2, தமிழ் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உருவெடுத்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் பயணத்தையும் மற்றும் அவர்களது தனித்துவ தன்மையையும் காட்சிப்படுத்தவிருக்கும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்ற ஒவ்வொரு போட்டியாளரின் நடன நிகழ்ச்சியையும், சிறப்பு தருணங்களையும் ஒன்றாக இணைத்து வழங்கும். பிரித்வி – தியான், காவ்யா – மகாலட்சுமி, வினோஷ் – கபீர், கார்த்திக் – தியாகு, ராய்சன் – மெர்சினா மற்றும் மனோஜ் – அமிர்தா ஆகிய திறன்மிக்க நடனக்கலைஞர்களின் குழுக்கள் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றன. இதற்கிடையே அரை இறுதி சுற்றில் வெளியேறிய அய்ஷு மற்றும் அல்ஹேனா அவர்களுது தாயாரும் நடன குருவும் ஆனா ஷைஜி உடன் இணைந்து ஒரு சிறப்பு நடனத்தை வெளிக்காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். இதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடன இயக்குனர் பிருந்தா மற்றும் காலா மாஸ்டர் ஆகிய இருவருக்கும் அவர்களுது தாயாரின் புகைப்படம் கொண்ட ஒரு அருப்புத ஓவியத்தை பரிசளித்த தருணம் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்ட செய்வது நிச்சயம்

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டி இரண்டு தொடர்ச்சியான சுற்றுகளாகப் பிரிக்கப்படும்; பிரமிக்கச்செய்யும் இந்த இறுதிப்போட்டியில் பிருத்வி – தியான் பங்கேற்கும் நடனத்தைத் தொடர்ந்து வினோஷ் – கபீர் குழுவின் நடனம் இடம்பெறுகிறது. இதற்கிடையே தங்களது நளினமான நடன அசைவுகளின் மூலம் பார்வையாளர்களை தன்வசப்படுத்துகின்ற ஒரு அழகான நடனத்தை ராய்சன் – மெர்சினா குழு வழங்கும். புது வெள்ளை மழை திரைப்பட பாடலுக்கு நடனமாடும் மனோஜ் மற்றும் அம்ரிதா குழு, இன்னும் இந்நடனம் தொடராதா என்று பார்வையாளர்கள் ஏங்கும் அளவிற்கு கண்கவர் நடனமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்நிகழ்வு பற்றி சிறப்பு விருந்தினரான பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசுகையில், ‘பல்வேறு நடன போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக நான் இருந்திருக்கிறேன். ஆனால், டான்ஸ் ரியாலிட்டி பிரிவில் டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 புதிய அளவுகோல்களை உறுதியாக நிர்ணயித்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த சிறப்பான நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு கலர்ஸ் தமிழ் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நடனத்தில் அற்புதமான திறமைகளை கொண்டவர்களை ஒருங்கே காண்பது விவரிக்க இயலாத இனிய அனுபவம். இந்த பாரம்பரியத்தை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் கடமைப்பொறுப்பை அவர்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.’ என்று கூறினார்.

இதை ஆமோதித்துப் பேசிய டான்ஸ் VS டான்ஸ் 2 -ன் நடுவரும், அனுபவம் மிக்க நடன இயக்குனருமான பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: ‘டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2-ன் பயணம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக இருந்திருக்கிறது. இப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்ற காலம் முழுவதிலும் இந்த இளம், திறமைசாலிகளான நடனக் கலைஞர்கள், அவர்களது திறனை இன்னும் பட்டைத்தீட்டி, மிளிரச்செய்ததை காண்பது, இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக எங்களுக்கு பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவமாக இருந்திருக்கிறது. இறுதிப்போட்டியாளர்களாக பங்கேற்கும் ஒவ்வொருவருமே தனித்துவ திறன் கொண்டவர்கள்; இவர்களது திறமை நிச்சயமாக இவர்களை இன்னும் அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்லும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் மற்றும் குறிப்பாக இந்நிகழ்ச்சியும் முன்னேறிச் செல்வதற்கான ஒரு படிக்கட்டாக ஒரு மிக முக்கியப் பங்கை ஆற்றியிருக்கின்றன.’

‘நடனம் என்பது, எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கலை வடிவமாகும். நடனமாடுவதை நான் முழுமையாக அனுபவித்து ரசிக்கிறேன். இந்நிகழ்ச்சியின் மூலம் இந்த திறமையான இளம் நடனக் கலைஞர்களுக்கு எங்களது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டு, தவறுகளை சுட்டிக்காட்டி, இன்னும் சிறப்பாக நடனமாட செய்திருப்பது ஒரு மிகச்சிறந்த அனுபவமாகும். எனது சிறந்த தோழியும், புகழ்பெற்ற நடன இயக்குனருமான பிருந்தாவுடன் இந்த அனுபவம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும், கௌரவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதை ஒருபோதும் மறக்காமல் என்றும் நான் மனதில் பசுமையான நினைவாக போற்றி பாதுகாப்பேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். இனிவரும் ஆண்டுகளிலும் இந்த உறவையும், தொடர்பையும் தொடர நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.’ என்று பிரபல நடிகையும், இந்நிகழ்ச்சியின் நடுவருமான குஷ்பு கூறினார்.

டான்ஸ் Vs. டான்ஸ் சீசன் 2-ன் கௌரவம்மிக்க விருதை வெல்லப்போவது யார் என்று கண்டறியவும், இறுதிப்போட்டியின் பிரமிக்கச் செய்யும் நடனங்களை கண்டு ரசிக்கவும் ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கும், ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் பாருங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here