Actor Sivakarthikeyan’s forthcoming movie ‘Don’ is all set for the worldwide theatrical release on May 13, 2022. The film is produced by Lyca Productions in association with SK Productions. The film is directed by Cibi Chakaravarthi and features Priyanka Arul Mohan in the female lead role. SJ Suryah, Samuthirakani and many more greatest and popular actors are a part of this star cast. Red Giant Movies Udhayanidhi Stalin is releasing the movie all over Tamil Nadu. The Pre-Release event of this movie was held at Jeppiaar Engineering college amidst the huge fanfare of college students.

Tamil Kumaran, Lyca Productions Head, said, “I thank Sivakarthikeyan and Kalai Arasu for being a greater support. I thank Subash anna for giving me space to explore my potentials. Sivakarthikeyan’s previous movie ‘Doctor’ collected Rs. 100Cr in the box office, and ‘Don’ will not miss to spin the same. Anirudh has delivered commendable league of songs. I thank the successful actress Priyanka Arul Mohan, SJ Suryah sir and Samuthirakani sir for being a part of this project. Director Cibi is a hard working person, and he has done his best for nurturing this movie. I thank Udhayanidhi Stalin sir for extending their complete support towards this project.”

Kalai Arasu, co-producer, SK Productions said, “Even before taking off with this project, Sivakarthikeyan brother told me that we are collaborating with Lyca Productions, and we have to earn them good profit. I am glad to state that they have got a table profit with Don. I would like to thank the entire cast and crew of this movie. I thank Udhayanidhi Stalin sir and his team of Red Giant for ensuring a great release for our movie. Don will be a fun-filled movie for all. In ‘Doctor’, you saw him as a doctor, and in Don, you will see him as B.E., Bachelor of Entertainment.”

Producer-actor Udhayanidhi Stalin, Red Giant Movies, said, “I would like to congratulate the entire team of Don. Tamil cinema has two Dons now, One is Sivakarthikeyan and Anirudh. Both of them churn out great hits respectively, and their combination is a sure-footed winner. I have already seen the movie without re-recording 10 days ago. I got the complete confidence that the movie will be a bigger hit than Doctor. Many might have assumed this movie as a college backdrop story, but there is a cute school portion with Sivakarthikeyan and Priyanka Arul Mohan. SJ Suryah has done a remarkable job in the college portions, and Samuthirakani has done a great performance during the last 30 minutes. I wish that Lyca Productions must continue to make good movies.”

Editor Nagooran said, “This is my friend Cibi’s movie. 10 years ago, he told me that I will be the editor of his first movie, and he has kept up his promise.”

Cinematographer KM Bhaskaran said, “Don is very special and close to me. I extend my thanks to Siva sir. During the patch up work of Hero, he told that both will work together soon, and he has given the opportunity to me in this movie. Cibi’s vision and dedication is extraordinary. The narration he made, and the way, he has translated them visually is really great. Shooting SJ Suryah sir on the sets was a huge experience. The great highlight of this movie is that we have shot 5 filmmakers in this movie. Samuthirakani sir has done a remarkable job in this movie. Kalai sir has been a pillar in materializing this project efficiently.”

Art Director Udhay Kumar said, “Lyca Productions, Sivakarthikeyan sir, Kalai sir and director Cibi are the pillars in making the art works look so good. Everyone will enjoy this movie completely.”

Choreographer Shobi said, “When Cibi initially told me about the song, he just strongly affirmed that the song Jalabulajangu should be a massive hit song. I was kind off okay, but I wanted to listen to the song first. Of course, Anirudh had done a remarkable score, and then, it was my job to get it materialized properly. When it was time to shoot the song, Sivakarthikeyan had exerted an incredible effort in the song in spite of his health issues. There were lots of challenges while shooting this song and Sivakarthikeyan has done a tremendous work that will be celebrated by audiences in the theaters.”

Choreographer Bobby said, “I thank Cibi for giving me an opportunity to work in this movie. I have acted in this movie, and I didn’t get a chance to choreograph for his song. It was great to be working with SJ Suryah sir, Samuthirakani sir. I hope to choreograph SK in his next movie.”

Mirchi Vijay said, “I thank Sivakarthikeyan anna for being so much supportive. He gave us the positive vibes of being together with the friends after a long time. I thank Cibi brother for giving a chance to be a part of this movie. Working in Don was more like attending couple of classes; one is practical and another theory. One was while working with Siva anna, Samuthirakani sir, SJ Suryah and other artistes. Then when the camera was off, it would be a theory class as they would share their experience with us.”

Actress Sivangi said, “I thank Sivakarthikeyan anna, who was the first reason for me to be a part of this movie. I have always troubled Cibi sir with lots of questions, but he was cool and patient with me. Kalai sir was great to work with, and he was so cool throughout the shooting. SJ Suryah sir is such a great artiste, and I never expected that he would be so much down-to-earth. He used to narrate me more stories. Samuthirakani sir came to the sets inhaling the character, he plays in this movie. SK anna has been such a sweet person. In spite of making a great achievement, he is still humble and down-to-earth treating everyone equally on the sets. Priyanka was so cute, and she was nice to me on the sets. The entire technical team has been a great support to me; even I used to make some mistakes. I thank Anirudh sir for giving me a chance to be a part of ‘Don’ album.”

Actor Bala Saravanan said, “I thank Cibi Chakaravarthi for giving me a chance to be a part of this movie. We have been friends from the time, we worked together in a pilot movie, before 4-5 years. When I was working in Ayalaan movie, I had very limited scenes in the movie. During that time, Sivakarthikeyan brother told me that there is another project, and my role would be more. Apparently, he has kept his promise by making me a part of this movie. The unconditional love he gives is priceless during the project time, and even now is something phenomenal. I am a great fan of SJ Suryah sir. Even during the shot, we would forget our dialogues while watching him perform on the sets. Samuthirakani sir is more like a brother, who takes the privilege to beat us when we are wrong, and appreciate us when good things are done. Priyanka looked like a soft-spoken person during the initial days, but later, she took over the space and started pulling our legs with her sense of humour. Don will be a fun-filled entertainer for the audiences.”

Bigg Boss fame Raju said, “I have done a small role in this movie, but I am glad that SK Productions and Sivakarthikeyan brother has made a point of inviting me to this occasion and honouring me. I have already met the leading actors of this movie in various occasions before a long time. Once I met Samuthirakani sir during a special occasion, and he advised me to keep myself fit to become a hero. Sivakarthikeyan is a real don, who has created an unique empire for himself. Priyanka was a surprise arrival, and overnight, she has captured the hearts of millions. While SJ Suryah is shooting, we would be frozen in astonishment. It looks like Cibi has made this movie with his college experience. I have played a hilarious villain this movie. I thank everyone for giving a chance to be a part of this movie.”

Bigg Boss fame-actor Shariq said, “It was me who initially asked Cibi, if I have a chance to be a part of this film. Actually, 2 minutes is my screen time, and I hope he will give more scope for me in the next movie. I have been worked with Sivakarthikeyan anna right from the time he kick-started his journey with Kalakkapovathu Yaaru. I am happy that I got an opportunity to experience college life as I didn’t get a chance to have it in real life. I am glad to be working with SJ Suryah sir and Samuthirakani sir.”

SJ Suryah said, “The students herein this college will reflect their experiences with Don. I mentioned during the audio launch of Maanadu that it’s going to be a Diwali only when Maanadu is releasing. Similarly, there would have been many summer releases, but Don is going to be a 100% summer treat. Cibi sir was the co-director of Mersal, and used to be very caring for me. He is the Rajkumar Hirani of Tamil Nadu. Samuthirakani has done a fabulous job in this movie. Shivangi is a good hearted and innocent person, and I could sense it right from Day 1. Priyanka Arul Mohan is a very good artiste, and she will achieve greater heights. Sivakarthikeyan’s hard work and good nature will take him to greater heights. I take this opportunity to thank the entire cast and crew for giving me an opportunity to be a part of this movie.

Actor Samuthirakani said, “I thank Lyca Productions, SK Productions, Udhayanidhi Stalin brother, the future of Tamil Nadu, Sivakarthikeyan. Initially, I didn’t want to be a part of this movie event as it had left me emotionally inclined in many scenes. There were many shots, where I had to express the character’s anger, but I couldn’t make it due to some emotional elements. When Cibi narrated the script, it was like reliving my life. Cibi is going to scale greater heights, and will definitely leave a great impact on the audiences. It was more like my father getting into me through this movie. Don will be a blockbuster, and Sivakarthikeyan will be an unavoidable hero of the Indian film industry. The entire technical team has done a great work in this movie. Anirudh has become a top-charting musician across the country. Priyanka is more like a girl to next door, and it was nice to work with her. I request all the fans to support Sivakarthikeyan to scale greater heights.”

Actress Priyanka Arul Mohan said, “I have got a cute gang for lifetime while working in this movie. It was more like revisiting my college days again. I thank SK Productions and Lyca Productions for making me a part of this project. Working with Samuthirakani sir, SJ Suryah has been a greater learning experience. I thank Anirudh for his hit album. I thank Shobi master and Lalitha master for such a wonderful choreography. I thank the fans here for the love and support that has made me have a smooth journey in the industry. Don will be a fun-filled entertainer to watch with families and friends.”

Director Cibi Chakaravarthi said, “This moment is something that I envisaged for years. I thank my parents for being a great support in nurturing my dreams. I thank Atlee for making me comfortable and eligible to handle such a big star-cast. He has been my mentor and has made me gain so much experience. A phone call from Sivakarthikeyan sir changed my life. The success of SK has been inspiration for many including me. Despite the grand success of his movies, he has always maintained his down-to-earth nature. Right from the time of inception, there have been lots of challenges including the corona issues. But even during that time, sir would keep giving inputs for better output. In Don, SK sir has given life to two people, the real and reel-Chakaravarthi in the movie. Anirudh sir is a man of positivity, and I could feel it right from our first meet. SJ Suryah and Samuthirakani are the pillars of this movie. Priyanka Arul Mohan is a sincere and dedicated artiste. I thank the entire team for the great support. Don will be a fun-filled and beautiful entertainer for everyone in the theaters.”

Actor Sivakarthikeyan said, “When we started to work in this project, we wanted to make sure that Lyca Productions has a table profit, and we have accomplished it successfully. When Cibi narrated the script of Don, it was really happy and emotionally connecting. It is a story that is a reflection of every student in college, and Cibi has crafted it very nicely. I request everyone to support this movie. If Don becomes a good success, it will give hope to people like me and producers in such a way that they will start giving opportunities to newcomers. I am lucky to have got a team that comprises the ones that I have admired a lot. The speech that Samuthirakani sir gave so much emotional, and so will be his characterization in this movie. I started my mimicry works with the voice of SJ Suryah sir, and I was popular in the college culturals for this reason. I even told him this, during the shooting. Since, I have an introduction song and song with heroine, it doesn’t mean that I am not the hero. I would say that every character in this movie is a hero and has its own values. Priyanka has done a good job in this movie. Since she is very well versed with the Tamil language, it was easy for the director to communicate with her, and she indeed was able to give her best. Bala, Raju, Shariq, Shivangi, Vijay and others were amazing. It was nice to spend time with them, and it was more like revisiting my college. Shivangi has done a good and cute work in this movie. I was really amazed with the performance of Bala Saravanan in the web series Vilangu. The technical team has been a great pillar. Anirudh couldn’t come to this event as he is giving the final touch to the movie. He has been working day and night for his movies without sleep for the past one month due to his continuous projects. His support for my movies has been stupendous. The big challenge for our entire crew was to face the Pandemic. Almost all the scenes involved college crowds, and only with the cooperation of the entire crew, we were able to shoot these sequences without any hurdles. I am really happy for Cibi, who has made his parents feel proud today. I wish that he continues to work hard, and the rest, audiences will take care. Red Giant Movies Udhayanidhi Stalin sir is releasing our movie, and we are happy that Don is going to witness a wider release with his Midas-touch. Don was more like revisiting my childhood, as my dreams and ambitions kept shifting from time-to-time. The movie will have some reflection for the audiences as they walk out of the theaters after this show. I thank my fans, who have been showering unconditional love and support all over the years.”

LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும்,
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்”
படத்தின் முன் வெளியீட்டு விழா

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு
விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

LYCA PRODUCTIONS சார்பில் தமிழ் குமரன் கூறியதாவது…
எங்களுக்கு ஆதரவாக இருந்ததற்கு சிவகார்த்திகேயனுக்கும், கலை அரசுக்கும் நன்றி. எனது திறமையை வெளிக்கொண்டு வர இடம் கொடுத்த சுபாஷ் அண்ணனுக்கு நன்றி. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்ததது, ‘டான்’ படமும் அந்த சாதனையை நிகழ்த்தும். அனிருத் அனைவரையும் கவரும் படியான பாடல்களை வழங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக வெற்றிகரமான நடிகை பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குனர் சிபி ஒரு கடின உழைப்பாளி, மேலும் அவர் இந்த படம் சிறப்பாக வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். இந்த படத்திற்கு முழு ஆதரவையும் வழங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.

கதிர், இணை தயாரிப்பாளர், SIVAKARTHIKEYAN PRODUCTIONS பேசியது….

“இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே, சிவகார்த்திகேயன் என்னிடம், நாம் LYCA PRODUCTIONS உடன் இணைந்து பணியாற்ற போகிறோம், அவர்களுக்கு நல்ல லாபத்தை தர வேண்டும் என்று கூறினார். டான் மூலம் அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே லாபம் கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் படத்தின் வெளியீட்டை சிறப்பாக மாற்றிய உதயநிதி ஸ்டாலின் சார் மற்றும் அவரது Red Giant குழுவினருக்கு நன்றி. டான் அனைவருக்குமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனை டாக்டராகப் பார்த்தீர்கள், டான் திரைப்படத்தில் பி.இ., பேச்சுலர் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் – ஆக பார்ப்பீர்கள்” அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், Red Giant Movies, பேசியது….
“ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது. ரீ-ரிக்கார்டிங் செய்யவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தை பார்த்துவிட்டேன். டாக்டரை விட இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளி பகுதி இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். LYCA PRODUCTIONS தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கலை இயக்குனர் உதய்குமார் பேசியது…
LYCA PRODUCTIONS, சிவகார்த்திகேயன் சார், கலை சார், இயக்குனர் சிபி ஆகியோர்தான் இந்த படத்தின் கலைப் பணிகள் மிக அழகாக அமைந்ததற்கான காரணம். இந்தப் படத்தை அனைவரும் முழுமையாக ரசிப்பார்கள். அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் KM பாஸ்கரன் பேசியது…
டான் திரைப்படம் மிக அட்டகாசமான படம், மற்றும் எனக்கு நெருக்கமான ஒரு படம். சிவா சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஹீரோ’ படத்தின் பேட்ச் அப் பணியின் போது, இருவரும் விரைவில் இணைந்து மீண்டும் பணியாற்றுவோம் என்று கூறிய அவர், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். இயக்குனர் சிபியின் பார்வையும், அர்ப்பணிப்பும் அசாதாரணமானது. அவர் கதையை விவரித்த விதமும், காட்சிப்படுத்திய விதமும் மிக அருமை. எஸ்.ஜே.சூர்யா சாரை படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவு செய்தது மிகப்பெரிய அனுபவம். இந்தப் படத்தில் 5 இயக்குனர்களை படம் பிடித்தது, இந்தப் படத்தின் பெரிய சிறப்பம்சமாகும். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தை திறம்பட செயல்படுத்துவதில் கலை சார் ஒரு தூணாக இருந்துள்ளார்.

படதொகுப்பாளர் நாகூரான் பேசியது…
இது எனது நண்பன் சிபி உடைய படம். 10 ஆண்டுகளுக்கு முன், சிபியின் முதல் படத்திற்கு நான் எடிட்டராக பணியாற்ற வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடன இயக்குனர் ஷோபி பேசியது…
சிபி ஆரம்பத்தில் பாடலைப் பற்றி என்னிடம் கூறியபோது, ஜலபுலஜங்கு பாடல் ஒரு பெரிய ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார். நான் சரி என்ற முடிவில் இருந்தேன், ஆனால் முதலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். அனிருத் ஒரு பிரமாதமான பாடலை அமைத்திருந்தார், பின்னர், அதனை சரியாக உருவாக்குவது எனது வேலையாக இருந்தது. பாடலின் படப்பிடிப்பு நேரம் வந்தபோது, சிவகார்த்திகேயன் உடல்நலக்குறைவில் இருந்தபோதிலும் பாடலில் நம்பமுடியாத முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பாடலை படமாக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன, இருந்தாலும் திரையரங்குகளில் பார்வையாளர்களால் கொண்டாடப்படும் ஒரு மகத்தான வேலையை சிவகார்த்திகேயன் செய்துள்ளார். பாடலை கண்டிப்பாக ரசிப்பீர்கள்

நடன இயக்குனர் பாபி கூறியதாவது…
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபிக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன், படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா சார், சமுத்திரக்கனி சார் ஆகியோருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.கே.வின் அடுத்த படத்தில் நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

நடிகை மற்றும் பாடகி சிவாங்கி பேசியது…
இந்தப் படத்தில் நான் நடிக்க முதல் காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நான் எப்போதும் சிபி சாரை பல கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தார். கலை சார் உடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாக இருந்தது, படப்பிடிப்பு முழுவதும் அவர் மிகவும் கூலாக இருந்தார். எஸ்.ஜே.சூர்யா சார், இவ்வளவு பெரிய கலைஞன், அவர் இவ்வளவு பணிவான மனிதராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் எனக்கு நிறைய கதைகளை கூறினார். சமுத்திரக்கனி சார் அவரது கேரக்டரை முழுமையாக உள்வாங்கி படப்பிடிப்பிற்கு வந்தார். எஸ்.கே.அண்ணா அவ்வளவு இனிமையான மனிதர். அவ்வளவு பெரிய நடிகரான போதிலும், அவர் இன்னும் பணிவாகவும், செட்டில் அனைவரையும் சமமாகவும் நடத்துகிறார். பிரியங்கா படபிடிப்பு தளத்தில் மிகவும் அழகாக இருந்தார், படப்பிடிப்பில் அவர் என்னிடம் நன்றாக பழகினார். நான் சில தவறுகளை செய்த போது, முழு தொழில்நுட்பக் குழுவும் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தது. அனிருத் சார் இசையமைக்கும் இந்த படத்தில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நடிகர் பால சரவணன் பேசியது…
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி சக்கரவர்த்திக்கு நன்றி. நாங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைலட் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாய் இருந்து வருகிறோம். நான் அயலான் படத்தில் பணிபுரிந்தபோது, படத்தில் எனக்கு மிகக் குறைவான காட்சிகளே இருந்தன. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணன் வேற ப்ராஜெக்ட் இருக்கு, அதில் என் ரோல் அதிகமா இருக்கும்னு சொன்னார். இந்தப் படத்தில் என்னையும் ஒரு அங்கமாக ஆக்கியதன் மூலம் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படபிடிப்பு நேரத்தில் அவர் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது, இப்போதும் கூட அவர் காட்டும் அன்பு தனித்துவமானது. நான் எஸ்.ஜே.சூர்யா சாரின் தீவிர ரசிகன். படப்பிடிப்பின் போது, செட்டில் அவரது நடிப்பைப் பார்த்து எங்களது வசனங்களை மறந்துவிடுவோம். சமுத்திரக்கனி சார் ஒரு சகோதரனைப் போன்றவர், தவறு செய்யும் போது உரிமை எடுத்து நம்மை கண்டிப்பார், நல்லது செய்தால் பாராட்டுவார். ஆரம்ப நாட்களில் பிரியங்கா சாதுவாக தெரிந்தார், ஆனால் பின்னர், அவரது நகைச்சுவையால் எங்களை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். டான் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

நடிகர் RJ விஜய் கூறியதாவது…
எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் இருக்கும் உணர்வை போன்ற அனுபவத்தை எங்களுக்கு வழங்கினார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி அண்ணனுக்கு நன்றி. டான் படத்தில் பணிபுரிவது இரண்டு வகுப்புகளில் கலந்துகொள்வதைப் போன்றது, ஒன்று பிராக்டிகல் மற்றொன்று தியரி. ஒன்று சிவா அண்ணா, சமுத்திரக்கனி சார், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிற கலைஞர்களுடன் பணிபுரிந்தது. பின்னர் கேமரா ஆஃப் ஆனதும், அது ஒரு தியரி வகுப்பாக இருக்கும், ஏனெனில் அனைவரும் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர் நன்றி.

பிக்பாஸ் புகழ் ராஜு கூறியதாவது…
இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், ஆனால் SK Productions மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணன் இந்த விழாவிற்கு என்னை அழைத்து கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் முன்னணி நடிகர்களை நான் நீண்ட நாட்களுக்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சமுத்திரக்கனி சாரை ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது சந்தித்தேன், ஹீரோவாக வருவதற்கு என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிவகார்த்திகேயன் ஒரு உண்மையான டான், அவர் தனக்கென ஒரு தனித்துவமான சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். பிரியங்கா ஒரே இரவில் திடிரென வந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கைப்பற்றிவிட்டார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் போது, நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவோம். சிபி தனது கல்லூரி அனுபவத்தை வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பிக்பாஸ் புகழ் நடிகர் ஷாரிக் கூறியதாவது…
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முதலில் நான் தான் சிபியிடம் கேட்டேன். உண்மையில், படத்தில் 2 நிமிடம் தான் நான் வருவேன், அடுத்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் கொடுப்பார் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் அண்ணா கலக்கப்போவது யாரு மூலம் தனது பயணத்தை தொடங்கிய காலத்திலிருந்தே அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் எனக்கு கிடைக்காத கல்லூரி வாழ்க்கையை, திரைப்படத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகர் சமுத்திரகனி கூறியதாவது…
ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது. சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

SJ சூர்யா பேசியது…
இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் உடைய அனுபவங்கள் டான் படத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்த கோடைகாலத்தில் பல படங்கள் வெளியாகி இருக்கலாம், ஆனால் டான் 100% ஒரு கோடை விருந்தாக இருக்கும். மெர்சல் படத்தின் இணை இயக்குநராக இருந்தபோதே சிபி சார், என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவர்தான் தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும், நல்ல குணமும் அவரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியதாவது…
இந்த படத்தில் பணிபுரிந்ததன் மூலம் எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான நட்பு வட்டாரம் கிடைத்தது. என் கல்லூரி நாட்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருந்தது. இந்த படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்ததற்கு SK Productions மற்றும் Lyca Productions நிறுவனங்களுக்கு நன்றி. சமுத்திரக்கனி சார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் பணிபுரிந்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. அனிருத்தின் ஹிட் ஆல்பத்திற்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான நடனத்தை படத்தில் அமைத்த ஷோபி மாஸ்டருக்கும், லலிதா மாஸ்டருக்கும் நன்றி. நான் இண்டஸ்ட்ரியில் சுமூகமாக பயணிக்கும்படி, இங்குள்ள ரசிகர்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. டான் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியது…
இந்த தருணம் நான் பல வருடங்களாக காத்திருந்த ஒன்று. எனது கனவுகளை நனவாக்க பெரும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றிய அட்லீக்கு நன்றி. அவர் எனது வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களைப் கற்று தந்தார். சிவகார்த்திகேயன் சாரின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. SK வின் வெற்றி நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கொரோனா பிரச்சனைகள் உட்பட பல சவால்கள் இருந்தன. ஆனால் அந்த நேரத்திலும், அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். டான் படத்தில், SK சார், நிஜ மற்றும் ரீல்-சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் உயிர் கொடுத்துள்ளார். அனிருத் சார் ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். பெரும் ஆதரவை வழங்கிய ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி. டான் திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்.

நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது…
இந்த படத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கியபோது, Lyca Productions டேபிள் லாபத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம். சிபி, டான் படத்தின் ஸ்கிரிப்டை கூறியபோது, அது மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பிரதிபலிக்கும் கதை இது, அதை சிபி மிக அழகாக வடிவமைத்துள்ளார். அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டான் படம் நல்ல வெற்றியடைந்தால், என்னைப் போன்றவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் மிகவும் ரசித்தவர்களைக் கொண்ட ஒரு குழுவைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் உடைய கதாபாத்திரம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். எனது கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சிகளில் SJ சூர்யா சாரின் குரலில் மிமிக்ரி செய்ய தொடங்கி, அதன் மூலம் பிரபலமானேன். படப்பிடிப்பின் போது கூட இதை அவரிடம் சொன்னேன். படத்தில் எனக்கு அறிமுகப் பாடலும், கதாநாயகியுடன் ஒரு பாடலும் இருப்பதால், நான் ஹீரோ இல்லை. இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஹீரோ மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி சிறப்புகள் உண்டு. இந்தப் படத்தில் பிரியங்கா சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதால், இயக்குனருக்கு அவரை நடிக்க வைப்பது எளிதாக இருந்தது, மேலும் அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது. பாலா, ராஜு, ஷாரிக், ஷிவாங்கி, விஜய் மற்றும் பலர் படத்தில் அசத்தியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது கல்லூரிக்கு திரும்புவது போல் இருந்தது. சிவாங்கி இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். விலங்கு வெப் தொடரில் பால சரவணனின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பக் குழு இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக இருந்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளை அனிருத் செய்துகொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக தனது படங்களுக்காக இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வருகிறார். எனது படங்களுக்கு அவர் அளித்த ஆதரவு அளப்பரியது. தொற்றுநோயை எதிர்கொள்வதே எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரிய சவாலாக இருந்தது. ஏறக்குறைய அனைத்து காட்சிகளும் கல்லூரி கூட்டத்தை உள்ளடக்கியது, மேலும் முழு குழுவினரின் ஒத்துழைப்புடன் மட்டுமே, இந்த காட்சிகளை எந்த தடையும் இல்லாமல் எங்களால் படமாக்க முடிந்தது. இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திய சிபியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மீதமுள்ளவற்றை பார்வையாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் சார் எங்கள் படத்தை வெளியிடுகிறார், அவர் மூலம் டான் படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காணப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டான் படத்தில் கனவுகளும் லட்சியங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது, எனது குழந்தைப் பருவத்தை மறுபரிசீலனை செய்வது போல் இருந்தது. படம் முடிந்து திரையரங்குகளை விட்டு வெளியில் செல்லும் பார்வையாளர்களுக்கு படம் சில தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எனது ரசிகர்களுக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here