விஜய் கௌரிஷ் புரோடக்சன்ஸ்” மற்றும் நம்பி சினிமா ஸ்கூல் தயாரிப்பில் “ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்”

நூற்றாண்டு கண்ட தமிழ்சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை கதை திருட்டு. கதை திருட்டை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ்சினிமாவும் வரவில்லை. முதல் முறையாக கதை திருட்டை பேசும் படமாக உருவாகியிருக்கும் படம் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்”

கதைக்காக நடிகர்களா? கமர்ஷியலுக்காக நடிகர்களா? கதை முக்கியமாக? ஹீரோயிசம் முக்கியமாக? என்பதை பேசுபொருளாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன். படத்தின் இறுதியில் சுமூகமான ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற “டுலெட்” பட கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன், “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் கதாநாயகன் ஆண்டனி, “நேரம்” “வெற்றிவேல்” படங்களின் இரண்டாம் கதாநாயகனான ஆனந்த் நாக்,
சுப்பிரமணியம் சிவா, “கயல்” வின்சென்ட் நகுல், விஜய் கெளரிஷ், தீக்ஷனா, மற்றும் தென்றல் ரகுநாதன் கதை நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் பழம்பெரும் வெற்றி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: சதீஷ்குமார்

இசை: கெவின் டிகாஸ்டா

பாடல்: நிலவை பார்த்திபன்

எடிட்டிங்: வினோத் கண்ணன்

ஸ்டண்ட்: சரவணகுகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சந்தோஷ் நம்பிராஜன்.

“ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்” சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செய்தித்துறை மற்றும் சினிமா ஊடகத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here